எஸ்எஸ்எல்சி ரிசல்ட்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் டாப் 3..பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர், சிவகங்கை,விருதுநகர் கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் 91.39% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் மாணவியர்கள் 4,30,710 பேரும் மாணவர்கள் 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16% ஆகவும் பதிவாகியுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் 89.77% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் சிறைவாசிகள் 42.42% பேரும், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 87.45% சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 92.24% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.67 சதவீதத்துடன் மாவட்டம் முதலிடத்தில் உள்ளநிலையில் , 97.53 சதவிகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்திலும் , 96.22% விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. கன்னியாகுமரி 4வது இடத்தையும் தூத்துக்குடி கல்வி மாவட்டம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications