எத்தனை வருசம் ஆச்சு! பரஸ்பர நலம் விசாரிப்பு! மண விழாவில் ராமதாஸ் ஸ்டாலின் நேருக்கு நேர் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினும் பாமக நிறுவனர் ராமதாசும் நீண்ட நாட்களுக்கு பிறகு நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அன்புமணி ராமதாஸின் மைத்துனரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுவர்தன் மகள் திருமண வரவேற்பு விழா நேற்றிரவு சென்னையில் நடைபெற்றது. அதில் தான் இந்த இரண்டு எதிர் எதிர் துருவங்களும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்ட பண்பாடு நிகழ்வும் நடந்துள்ளது.

Stalin and Ramadoss met face to face after a long time is seen as an important event in political circles

பாமக நிறுவனர் ராமதாசும் சரி, பாமக தலைவர் அன்புமணியும் சரி வாரத்திற்கு 4 அறிக்கைகளாவது அரசை விமர்சித்தும், தவறுகளை சுட்டிக்காட்டியும் வெளியிடுவார்கள். அதேபோல் மதுவிலக்கு விவகாரத்திலும் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

இந்தச் சூழலில் நேற்றைய தினம் திருமண வரவேற்பு விழாவில், ராமதாசும், ஸ்டாலினும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துப் பேசியதோடு உடல்நலம் குறித்த அக்கறையான விசாரிப்புகளும் நடந்துள்ளன. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுமாறு ராமதாஸை ஸ்டாலின் கேட்டுக்கொண்ட நிலையில், அவரும் ஸ்டாலினின் உடல்நலம் பற்றியும் அண்மையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்தும் கேட்டறிந்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பின் போது மேடையில் இருந்த அன்புமணி ராமதாசும் ஸ்டாலினின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ராமதாசும், ஸ்டாலினும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டதும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதும் அதிமுக தரப்பில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது.

இதனிடையே மணமக்களுக்கு வழக்கம் போல் பசுமைக்கூடையை பரிசாக வழங்கி வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின், மணமக்கள் அருகில் நின்று கொண்டிருந்த மணமகளின் தாத்தாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான கிருஷ்ணசாமியிடமும் நலம் விசாரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+