என்னதான் பகை இருந்தாலும் நேரில் பார்த்தவுடன் கைகுலுக்கி ஹேப்பி நியூ இயர் சொன்ன ஸ்டாலின்- டிடிவி
Recommended Video
சென்னை: என்னதான் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் இடையே அரசியலில் மாறுப்பட்ட கருத்துகள் இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்த போது கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். இன்று ஒரு அணியில் இருப்பவர் நாளை வேறு அணியில் இருப்பார்கள்.
என்னதான் குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்துக் கொண்டாலும் இருக்கும் கட்சியில் பிரச்சினை என வந்துவிட்டால் கண்ணை மூடி கொண்டு வேறு கட்சிக்கு தாவுவதை பார்த்துள்ளோம்.

ஆரோக்கியமான அரசியல்
அதே சமயம் எத்தனை மனமாச்சரியங்கள் இருந்தாலும் நேரில் பார்த்துக் கொள்ளும் போது இரு கட்சியின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்து கொள்வது வழக்கம். இதுதான் ஆரோக்கியமான அரசியல் ஆகும்.

தினகரன்
இந்த அரசியலைத்தான் பாரம்பரிய கட்சிகளான அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை கடைபிடித்து வருகின்றன. அதே அப்படியே டிடிவி தினகரனும் பிடித்து கொண்டுவிட்டார்.

வெளிநடப்பு
ஆம் இன்று சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க ஆளுநர் அனுமதி வழங்கவில்லை என கூறி திமுக வெளிநடப்பு செய்தது. அது போல் அந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் உள்ள ஒரே ஒரு அதிமுக எம்பி ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரனும் வெளிநடப்பு செய்தார்.

வாழ்த்து
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அந்த சந்திப்புக்கு பின்னர் ஒரு இடத்தில் தினகரனை நேருக்கு நேர் சந்தித்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டனர். மேலும் இருவரும் புத்தாண்டு வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

நெகிழ்ச்சி
திமுகதான் தனது முதல் எதிரி என டிடிவி தினகரன் கூறிவந்தார். அது போல் தினகரனை ஸ்டாலினும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் நேருக்கு நேர் சந்தித்த போது இவர்கள் நடந்து கொண்ட விதத்தை அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.












Click it and Unblock the Notifications