"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளுக்கு மேல் தந்தால் தான் பேச்சுவார்த்தைக்கே வருவோம் என்று உறுதியாகி கூறியுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திருப்திப்படுத்துவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதிகளை குறைக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் திருமாவளவனிடம் விட்டு கொடுக்கும்படி ஸ்டாலின் பேசி உள்ளதாக தவகல்கள் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அவ்வளவு சுலபமாக உள்ளது. கூட்டணியில் பிரளயத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் கடந்த முறையை விட கூடுதலாக 3 தொகுதிகள் பெற்று 28 தொகுதிகளில் களமிறங்க உள்ளது.

stalin thirumavalavan vck cpim

காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடாப்பிடியாக தங்களுக்கு 6 தொகுதிக்கு மேல் வேண்டும் என்று கேட்டு வருகிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களை வென்றது. 4 இடங்களில் தோற்றது.

திமுக - மார்க்சிஸ்ட் பிரச்சனை

ஆனால் தற்போதும் 6க்கும் மேலாக தொகுதிகள் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்டு வருகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கம் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் வந்துள்ளதால் ஒரு தொகுதியை விட்டு கொடுத்து 5 இடங்களை வழங்க திமுக முயன்றது.

ஆனால் அதனை ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மறுத்துள்ளது. மேலும் 6 தொகுதிக்கு மேல் என்றால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழையுங்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகி கூறிவிட்டது. இதனால் திமுக - மார்க்சிஸ்ட் கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது.

ஸ்டாலின் - திருமா சந்திப்பு

இதையடுத்து திமுக - விசிக தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார். கடந்த முறை 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4ல் விசிக வென்றதோடு, தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக மாறி உள்ளது. இதனால் இரட்டை இலக்கத்தில் விசிக தொகுதிகளை கோரியது. அதனை ஸ்டாலின் ஏற்கவில்லை. புதிய கட்சிகளை காரணம் காட்டி தொகுதிகளை குறைக்கும்படி கேட்டுள்ளார்.

ஸ்டாலின் சொன்ன வார்த்தை

அதுமட்டுமின்றி, திருமாவளனிடம், ஸ்டாலின் இறங்கிபோய் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார். அதாவது கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளன. இதனால் அனைத்து கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சமாதானப்படுத்த வேண்டி உள்து. இதனால் விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து ஒன்றை குறைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விசிகவிற்கு எத்தனை தொகுதிகள்?

விசிகவிற்கு 6 முதல் 8 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் தற்போதைய தகவல்படி விசிகவிற்கு தமிழகத்தில் 6, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 7 சீட்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் விசிகவின் ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படியான விசிகவின் தொகுதி எண்ணிக்கையை திமுக குறைத்துள்ளதாம். இருப்பினும் தற்போது வரை மார்க்சிஸ்ட் - திமுக, திமுக - விசிக இடையே எந்த தொகுதி ஒப்பந்தமும் நடைபெறவில்லை. இருப்பினும் இன்று அல்லது நாளை இருகட்சிகளுடன் திமுக ஒப்பந்தம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸை விளாசும் திமுகவினர்

இதுபற்றி திமுகவினர் கூறுகையில், ''எல்லா பிரச்சனைக்கும் காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் தான் கூடுதல் தொகுதிகளை வேண்டும் என்று கேட்டு 28 இடங்களை பெற்றுள்ளது. அதேபோல் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்பட பிற கட்சிகள் கூடுதல் இடங்களை கேட்டு வருகின்றன'' என புலம்பி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+