சோனியா, ராகுல், நாயுடு வந்திருக்காங்க.. தலைவரே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்- ஸ்டாலின் உருக்கம்
சென்னை: சோனியா, ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் வந்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்களே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் என ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
இந்த விழாவில் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில் அண்ணா அறிவாலயத்துக்கு வரும் போது கருணாநிதி அங்கு இருக்கிறார். அவர் இன்றைக்கு அணு அளவும் தொடர்ந்து இயக்கி கொண்டிருக்கிறார். அவர் மறையவில்லை. அவர் மறையவே இல்லை என்ற உணர்வுதான் என் உயிரிலே ஓடிக் கொண்டிருக்கிறது.

அன்பழகனை
எங்கோ மறைந்து நின்று இன்றைக்கு நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் என் உள்ளத்தில் தோன்றியிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களே எங்கே போய்விட்டீர்கள். எனக்கு அக்காள்கள்தான் உண்டு. அண்ணன்கள் இல்லை. ஆனால் அண்ணனாக நான் கருதுவது பேராசிரியர் அன்பழகனைத்தான் அண்ணனாக கருதுகிறேன் என்பீர்கள்.

சோனியா காந்தி
மூச்சுக்கு முன்னூறு முறை பேராசிரியர் பேராசிரியர் என்பீர்களே. அந்த பேராசிரியர் முன்னிலையில்தான் உங்கள் சிலை திறப்பு விழா நடந்துள்ளது. நீங்கள் எங்கே போய் விட்டீர்கள். உங்களால் சொக்கத்தங்கம் என வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி மேடையில் இருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்.

ஆந்திர முதல்வர்
போராட்டம் குணம் படைத்தவர் என வாழ்த்திய ராகுல் வந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள். 1999-ஆம் ஆண்டுகளில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்திருந்த காலகட்டத்தில் பல்வேறு சிக்கலான நேரங்களில் நல்லெண்ணத்தோடு உங்களோடு இருந்து செயல்பட்ட ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்.

எங்கே தலைவர்
உங்களுடைய சமூகநீதிக் கனவுகளை, கொள்கைகளை கேரளாவில் அமல்படுத்தி வரும் பினராயி விஜயன் அமர்ந்திருக்கிறார். நீங்கள் எங்கே போய்வீட்டீர்கள். பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் உங்களுடைய ஆலோசனைகளை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து புதுவை மாநில முதல்வராக இருக்கும் நாராயணசாமி அமர்ந்திருக்கிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நீங்கள் எங்கும் போக வில்லை. போகவும் மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் சிம்மசனம் போட்டு இருக்கிறீர்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications