இயேசு அழைக்கிறார்.. பால் தினகரன் இல்ல மணவிழா! வாழ்த்த வந்த முதலமைச்சரிடம் ரூ.1 லட்சம் தந்த மணமக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன் இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம், யாரும் எதிர்பாராத வகையில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவனம் ஈர்த்துள்ளனர் மணமக்கள்.

இதுவரை மணமக்களுக்கு தான் முதலமைச்சர் ஸ்டாலின் பரிசு கொடுத்திருக்கிறார். முதலமைச்சருக்கு எந்த மணமக்களும் இது போல் பரிசு கொடுத்ததில்லை.

Stalin attended the wedding ceremony of Jesus Calls Paul Dinakaran daughter

இயேசு அழைக்கிறார் என்ற அமைப்பின் தலைவர் பால் தினகரனை பொறுத்தவரை கிறிஸ்துவ மக்கள் மத்தியில் மிகுந்த பரிச்சயமானவர். ஜெபக்கூட்டங்கள் மூலம் தமிழகமெங்கும் லட்சக்கணக்கான பின் தொடர்வோரை வைத்திருக்கிறார். இவரது மகள் ஸ்டெல்லா ரமோலாவுக்கும் டேனியல் டேவிட்சன் என்பவருக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

அதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள் பட்டாளத்துடன் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், மணமக்களுக்கு வழக்கம் போல் பசுமைக் கூடைகளை பரிசாக வழங்கினார். எந்த திருமணத்தில் பங்கேற்றாலும் பசுமைக் கூடைகளை மட்டுமே முதல்வர் மணமக்களுக்கு பரிசாக வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தங்களுக்கு பசுமைக்கூடைகளை பரிசாக வழங்கி வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலினிடம், பதிலுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மணமக்கள் வழங்கினர். நான் முதல்வன் மற்றும் காலை சிற்றூண்டி திட்டங்களுக்கு இந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+