"இது பாசிசமா பாயாசமா? விமர்சனத்தை கூட பொறுத்துக்க முடியலையா?” - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் முதன்மை ஆசிரியர் அருண் ராம் விமர்சித்து கட்டுரை எழுதிய நிலையில், அவரது பதிவு நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் முதன்மை ஆசிரியர் அருண் ராம், கடந்த 16 ஆம் தேதி வெளியிட்ட கட்டுரை, தவெக அரசை விமர்சனம் செய்திருந்தது. அடுத்த நாளே, அருண் ராம் உள்ளிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுவினர் முதல்வர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கப்பட்டுள்ளது.

Stalin

இதுதொடர்பாக பதிவிட்ட அருண் ராம், "கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை விமர்சித்து நான் கட்டுரை எழுதிய மறுநாளே, இன்ஸ்டாகிராமிலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது. அதன்படி, ஜூலை 21 அன்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' (TOI) குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களைக் கொண்ட அந்தப் பதிவு, "சட்டப்பூர்வத் தேவைகளின் காரணமாக" இந்தியாவில் பார்க்க முடியாதபடி நீக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இது பாசிசமா பாயாசமா? டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அருண் ராம், த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.

உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?

கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?

இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+