"இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல்".. சாட்டையை வீசிய ஸ்டாலின்
சென்னை: "அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்வது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல்." என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட அதன் முதல் பிரதியை மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்வது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல். நம் உயர்வுக்கும், மேண்மைக்கும் அடித்தளமாக இருப்பது கல்விதான். அறிவுதான் நமது ஆயுதம். கல்விக்கு தடை போட நினைக்கும் பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு போர் வாள் சுழற்றுகிறது. தேசியக் கல்விக்கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரைதான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கும்.
தேசியக் கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளர வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சொல்லியுள்ளார். எது நடக்கும் என நாம் எச்சரித்தோமோ அதனை உள்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இந்தியை தடுக்க ஒரே வழி கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதுதான். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றாவிட்டால், கல்வி என்பது அனைவருக்கும் எட்டாக்கனி ஆகிவிடும். இது ஈராயிரம் ஆண்டு காலப் போர்.. இதை தடுக்க ஒரே வழி இதுதான்" என பேசி உள்ளார்.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications