ஸ்டாலின், எடப்பாடி, ஓபிஎஸ், கமல், வேலுமணி, உதயநிதி.. வெற்றி முகம்! நட்சத்திர வேட்பாளர்கள் விவரம்
சென்னை: மாலை முரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, ஓபிஎஸ், உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன், சிவி சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது மாலைமுரசு தொலைக்காட்சி. இன்று நட்சத்திர வேட்பாளர்களில் யார் யார் வெல்வார்கள், யார் யார் தோற்க வாய்ப்பு உள்ளது என்பதை வெளியிட்டுள்ளது.
இதன்படி தற்போது வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளவர்களின் பட்டியலையும் அங்கு யார் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளது என்பதையும் இப்போது பார்ப்போம்.

கொளத்தூர்
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக+ 48 சதவீதம் ஆதரவையும், அதிமுக+ 37 சதவீதம் ஆதரவையும் பெற்று உள்ளன, அமமுக 2 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3 சதவீதம் ஆதரவையும், மநீம 7 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கவில்லை என 3 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் இங்கு போட்டியிடும் திமுக தலைவர் முகஸ்டாலின் வெற்றி உறுதி என தெரிகிறது.

எடப்பாடி தொகுதி
எடப்பாடி தொகுதியில் அதிமுக+ 51 சதவீதம் ஆதரவையும், திமுக+ 41 சதவீதம் ஆதரவையும் பெற்று உள்ளன, அமமுக 2 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3 சதவீதம் ஆதரவையும், மநீம 1 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கவில்லை என 2 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் இங்கு போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி உறுதியாகி உள்ளது.

போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக+ 43 சதவீதம் ஆதரவையும், திமுக+ 40 சதவீதம் ஆதரவையும் பெற்று உள்ளன, அமமுக 9 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3 சதவீதம் ஆதரவையும், மநீம 2 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கவில்லை என 3 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் இங்கு போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனும் திமுகவின் தங்கதமிழ்செல்வன் கடும் போட்டி தரக்கூடும் அமமுகவும் வாக்குகளை பிரிப்பதால் ஓபிஎஸ் பெரும் சவாலை எதிர்கொள்வார் என கூறப்படுகிறது.

விழுப்புரம் தொகுதி
விழுப்புரம் தொகுதியில் அதிமுக+ 48 சதவீதம் ஆதரவையும், திமுக+ 42 சதவீதம் ஆதரவையும் பெற்று உள்ளன, அமமுக 3 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 3 சதவீதம் ஆதரவையும், மநீம 1 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவு எடுக்கவில்லை என 3 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன் மூலம் இங்கு போட்டியிடும் அமைச்சர் சிவி சண்முகம் வெற்றி உறுதி என தெரிகிறது.

குமாரபாளையம்
குமாரபாளையம் தொகுதியில் - அதிமுக+ 47சதவீதம் ஆதரவையும், திமுக+ 38 சதவீதம் ஆதரவையும், அமமுக 2 சதவீதம் ஆதரவையும், நாம் தமிழர் 5 சதவீதம் ஆதரவையும், மநீம 3 % ஆதரவையும் பெற்றுள்ளது என மாலை முரசு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு போட்டியிடும் அமைச்சர் தங்கமணியின் வெற்றி உறுதியாகி உள்ளது.அவரை எதிர்த்து போட்டியிடும் திமுகவின் வெங்கடாச்சலம் 2ம் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது

தொண்டாமுத்தூர்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி 46 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும், திமுக கூட்டணி 40 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் மாலைமுரசு சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு போட்டியிடும் அமைச்சர் எஸ்பி வேலுமணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி 2ம் இடத்தை பிடிக்கக்கூடும் என தெரிகிறது. எனினும் மநீம வேட்பாளர் 7 சதவீம்வாக்குகளை வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறியிருப்பதால் இங்கு திமுக அதிமுக இரண்டுமே கடும் போட்டியை சந்திக்கக்கூடும்.

சேப்பாக்கம் தொகுதி
சேப்பாக்கம் தொகுதியில் திமுக கூட்டணிக்கு 51 சதவீத ஆதரவு உள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமகவிற்கு 36 சதவீதம் ஆதரவு மட்டுமே உள்ளது. மநீமவிற்கு6 சதவீதம் ஆதரவும், நாம் தமிழர் இயக்கத்திற்கு 4 சதவீதம் ஆதரவும், அமமுகவிற்கு ஒரு சதவீதம் ஆதரவும் உள்ளது.இந்நிலையில் 51 சதவீதம்ஆதரவை பெற்றுள்ளதாக திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மிகப்பெரிய வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.பாமக வேட்பாளர் கசாலி 2வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

கோவை தெற்கு
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மாலை முரசு சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனுக்கு 35 சதவீத பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு 29 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாருக்கு 24 சதவீதம் பேர் ஆதரவு கிடைத்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications