கொளத்தூர் தொகுதி பொறுப்பை பறிக்கும் திமுக.. சேகர்பாபு மீதான நடவடிக்கை.. தீவிரம் காட்டிய ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொளத்தூர் தொகுதியின் பொறுப்பை சேகர்பாபுவிடம் இருந்து கட்டாயம் பறிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாக அறிவாலய சீனியர்கள் பேசுகின்றனர். கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி அடைந்த பின், சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களுக்கான மதிப்பாகவே திமுக தலைமையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலில் சென்னையில் திமுக வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். ஸ்டாலினின் தோல்வி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் சென்னையில் திமுக அடைந்த தோல்விக்கு சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியம் ஆகியோரே காரணம் என்று சொல்லப்பட்டது.

Sekarbabu Stalin DMK

இதனால் இருவரின் அதிகாரத்தையும் பாதியாக குறைக்க வேண்டும் என்றும் பேச்சுகள் எழுந்தன. தொடர்ந்து சேகர்பாபு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உதயநிதி ஸ்டாலினும் தவிர்த்து வந்தார். கடந்த 3 மாதங்களில் சேகர்பாபு சென்னை கிழக்கு மாவட்டத்தில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஒன்றில் மட்டுமே உதயநிதி பங்கேற்றுள்ளார்.

இதனால் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடன்பிறப்புகள் நம்பிக்கையோடு இருந்தனர். இந்த நிலையில் திமுக மறுசீரமைப்பில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், நிர்வாக ரீதியாக 77ஆக இருந்த மாவட்டங்களை 110 மாவட்டங்களாக உயர்த்தி அறிவித்தார். அதேபோல் மாவட்டச் செயலாளருக்கான வயது வரம்பு 70ஆகவும் நிர்ணயித்திருக்கிறார்.

அந்த அடிப்படையில் சென்னையில் மட்டும் திமுக 10ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக துறைமுகம் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகள் தனித்தனி மாவட்டங்களில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி பொறுப்பை சேகர்பாபுவிடம் இருந்து பறிக்கும் திட்டத்தில் திமுக தலைமை இருப்பது புரிய வந்திருக்கிறது.

இதுதொடர்பாக விசாரித்த போது, சேகர்பாபுவிடம் இருந்து கொளத்தூர் தொகுதியை பறிப்பதற்காகவே கொளத்தூர், துறைமுகத்தை வெவ்வேறு மாவட்டங்களில் ஸ்டாலின் பிரித்துள்ளார். ஸ்டாலின் தோல்விக்கு பின் கொளத்தூர் பொறுப்பை பறிக்க வேண்டும் என்பதோடு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. அந்த குரல்களுக்கு மதிப்பு கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+