ரூ.50 மட்டுமே.. லைசென்ஸ் வாங்க.. டிரைவிங் ஸ்கூல் கார்களை நம்பியிருக்க வேண்டாம்.. தமிழக அரசு அசத்தல்
சென்னை: மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு, 145 இலகு ரக மோட்டார் கார்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத்துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகன தணிக்கை போன்ற பல்வேறு பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத்துறை தொடர்பான சேவைகளை பெறவும், புதிய பகுதி அலுவலகங்களை தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் உள் (போக்குவரத்து) துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான உள் (போக்குவரத்து) துறை மானியக் கோரிக்கையில், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் (LMV CAR) பெற விரும்பும் பொதுமக்களில் பெரும்பாலோனார் சொந்த வாகனம் இல்லாத காரணத்தால், ஓட்டுநர் உரிமம் பெறும் பொருட்டு, ஓட்டுநர் பயிற்சி பள்ளியை அணுக வேண்டிய நிலை உள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு, இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் / பகுதி அலுவலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தும் பொருட்டு, 145 அலுவலகங்களுக்கும் 145 எண்ணிக்கையிலான இலகு ரக மோட்டார் வாகனங்கள் (LMV Car) கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, பொதுமக்கள் நலன் கருதி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளார் (பகுதி) அலுவலகங்களை உள்ளடக்கிய மொத்தம் 145 அலுவலகங்களில் ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு 6 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட 145 எண்ணிக்கையிலான இலகு ரக மோட்டார் கார் வாகனங்களை வழங்கிடும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 3 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஆன்லைனில் டிரைவிங் டெஸ்ட்டுக்கு அப்ளை செய்யும்போது, 50 ரூபாய் கூடுதலாக ஆன்லைனில் செலுத்தினால் இந்த காரிலேயே 8 போட்டு காட்ட முடியும் பாஸ்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications