அதிமுக கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்.. அமைச்சர் ஜெயக்குமார் சுளீர் கருத்து
சென்னை:அதிமுக, பாமக, பாஜக இடையே கூட்டணி அமைந்ததால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், அதிமுகவானது சுறுசுறுப்பை காட்டி வருகிறது. பாமக, பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதிகள் அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் கூட்டணி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். இது குறித்து பேசிய ஸ்டாலின், அதிமுகவை விமர்சித்து புத்தகமே வெளியிட்டுள்ள பாமக, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்.
ஆனால் இன்றைக்கு மக்களை பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள் என்று ஸ்டாலின் பேசினார். அதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:அதிமுக. பாமக, பாஜக இடையே கூட்டணி அமைந்ததில் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். அதிமுகவில் மெகா கூட்டணி அமைந்து விட்டது என்ற ஆதங்கம் ஸ்டாலின் பேச்சில் தெரிகிறது.
அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் சொல்வது மக்களிடம் எடுபடாது. அதிமுக கூட்டணி இயற்கையாக அமைந்தது. இது மக்கள் நலனுக்கான கூட்டணி என்று அவர் கூறினார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications