பெண்களுக்கு திமுக அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது தெரியுமா? நீண்ட லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!

பெண்களுக்கு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை லிஸ்ட் போட்ட ஸ்டாலின்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை, கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இன்றைய காலக்கட்டத்தில், அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

Stalin has listed the achievements of the DMK government for women

முதல்வர் ஸ்டாலின் பேச்சு வருமாறு;

• பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

• அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு என ஒதுக்கீடு தந்து, அதை இப்போது 40 விழுக்காடாக உயர்த்தியிருக்கிறோம்.

• உள்ளாட்சித் தேர்தலில், முதன்முதலில் தமிழ்நாட்டில் தான் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை கலைஞர் கொண்டுவந்து நிறைவேற்றினார். இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

• ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள்.

• ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரிவரை இலவசக் கல்வியும் வழங்கியது.

• ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களாக, மகளிரை நியமித்தது.

• டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்,

• மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம்,

• டாக்டர் தருமாம்பாள் கைம்பெண் மறுமணத் திட்டம்,

• அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்,

• ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்

*மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை

*"புதுமைப் பெண்" என்னும் திட்டத்தின் மூலம் மாதம் தோறும் 1000 ரூபாய்

*1 லட்சத்து 83 ஆயிரத்து 389 மாணவிகளுக்கு 82 கோடியே 77 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை

இப்படி எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்தது, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

இன்றைய காலக்கட்டத்தில், அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

Stalin has listed the achievements of the DMK government for women

பெண்களை உயர்கல்வி படிக்க வைத்தல் -

அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல்-

மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல் -

கடன்கள் கொடுத்தல் -

புதிய தொழில்களைச் செய்ய வைத்தல் -

உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெறுதல் - எனப் பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+