ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? பார்த்து படிக்கும்போதே பலநூறு தவறை செய்பவர் அட்டாக்மோடில் சீமான்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற தகுதி தவிர வேறு என்ன தகுதி உள்ளது என்றும் பார்த்துப் படிக்கும் போதே பல நூறு தவறுகளைச் செய்பவர் ஸ்டாலின் என்றும் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அடுத்த வாரம் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது, இதில் பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுகவும், காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து திமுகவும் களமிறங்குகிறது. இதுதவிர சீமானின் நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.
மாநிலம் முழுவதும் நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சீமான் பேச்சு
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீதர் என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சீமான் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள் இருக்கும் வரை திமுக, அதிமுக இருக்கும் வரை இந்த நாட்டில் நல்ல அரசியல் பிறக்காது, பிறக்கவும் முடியாது என்று விமர்சித்தார்.

என்ன தகுதி இருக்கிறது
மேலும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கருணாநிதியின் மகன் என்ற தகுதி தவிர வேறு என்ன தகுதி உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார். பார்த்துப் படிக்கும் போதே பல நூறு தவறுகளைச் செய்பவர் ஸ்டாலின் என்றும் அவர் விமர்சித்தார்.

போட்டுப் பாருங்க ஓட்ட
ஒரு முறை வாய்ப்பு தாருங்கள் உலகத்தின் தலைசிறந்த நாடாகத் தமிழ்நாட்டை முன்னேற்றிக் காட்டுகிறேன் என்றும் பேசி அவர் வாக்கு சேகரித்தார். மேலும், "போட்டுப் பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட" என்றும் தனது டிரேட் மார்க் டையலாக்கையும் அவர் அங்கு பேசினார். விவசாய சின்னத்திற்கு ஓட்டுப் போட்டு வெல்ல வைத்தால், புதிய ஒரு தேசத்தைப் படைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்கு சேகரிப்பு
மேலும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகச் சிறந்த அறிஞர் என்றும் மிகவும் சிறந்த செயல்பாட்டாளர் என்றும் புகழாரம் சூட்டினார். வில்லிவாக்கம் தொகுதியில் வழக்கறிஞர் ஸ்ரீதரனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றியைத் தர வேண்டும் என்றும் அவர் பேசினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications