வெலவெலத்துப் போயிட்டாரே.. திமுக எம்.பி பேச்சை ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததை சீண்டும் பாஜக!
சென்னை: திமுக எம்.பி செந்தில்குமார் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் அவரை கண்டித்து, மன்னிப்பு கேட்க வைத்தார். இதையடுத்து, தேர்தல் முடிவுகளால் ஸ்டாலின் உண்மையை உணர்ந்துவிட்டார் எனக் கூறியுள்ளது பாஜக.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், "யூனியன் பிரதேசங்கள் தங்களை மாநிலமாக்க எதிர்பார்ப்பது தான் வழக்கம். ஆனால், முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாகியிருக்கிறது. பாஜக பல மாநிலத் தேர்தல்களில் வென்றிருக்கிறது. எப்போது அவர்களால் வெல்ல முடியவில்லையோ அந்த மாநிலத்தை அவர்கள் யூனியன் பிரதேசமாக்கிவிடுகிறார்கள். அங்கே ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்துகிறார்கள்.

இந்த நாட்டின் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். பாஜக வெற்றி பெறுவதெல்லாம் நாங்கள் கோமுத்ரா மாநிலங்கள் என்று குறிப்பிடும் இந்தி மாநிலங்களின் இதயப்பகுதியில்தான். பாஜகவால் தென்னிந்திய மாநிலங்களில் வெற்றிபெற முடியாது. பாஜகவால் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியாது. தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அவர்களுக்கு கிடைத்த முடிவுகளைப் பாருங்கள். நாங்கள் அங்கே மிகவும் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார் திமுக எம்.பி செந்தில்குமார்.
திமுக எம்.பி செந்தில்குமாரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்.பியின் பேச்சை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியினரும் கண்டித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினும் எம்.பி செந்தில்குமாரை கண்டித்து, அவரது கருத்தை திரும்பப் பெறுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, வட மாநிலங்கள் 'கோமூத்ரா மாநிலங்கள்' எனக் கூறிய விவகாரத்தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்பதாக தருமபுரி எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக சார்பில் அறிக்கை வெளியிட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள். பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார்.
பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டிய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெலவெலத்து, அஞ்சி, நடுங்கி, பயந்து, அச்சப்பட்டு 'மாட்டு மூத்திரம்' என்று திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் குறிப்பிட்டதை திரும்பப் பெற செய்து, அதை கண்டித்தும் இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
உண்மையை புரிந்து கொண்டு, சனாதன தர்மத்திற்கு எதிராக அதாவது ஹிந்து மதத்திற்கு எதிராக இனி பேசினால், மக்கள் வெகுண்டெழுவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆனால், கடந்த பல தசாப்தங்களாக, தொடர்ந்து இந்துக்களின் கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டை அவதூறு செய்த இயக்கத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்படியே உணர்ந்தாலும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications