“ஸ்டாலின் ஏதோ சூப்பர்ஸ்டார் போல் இருப்பதாக நினைத்து மற்றவர்களை உருவ கேலி செய்கிறார்” - ஆதவ் அர்ஜுனா
சென்னை: "ஆபாச வார்த்தைகளைப் பேசுவதில் மகன் 8 அடி பாய்ந்தால், தந்தை 15 அடி பாய்கிறார். தான் ஏதோ சூப்பர் ஸ்டார் போல் இருப்பதாக நினைத்து மற்றவர்களை உருவ கேலி செய்கிறார் மு.க.ஸ்டாலின். ஆபாச பேச்சில் மகனை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின்." எனப் பேசியுள்ளார் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளில் நாளை மறுநாள் (அக்டோபர் 6) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைந்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இன்று இறுதிக்கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, "நம்மை பார்த்து பயந்துவிட்டோம் எனச் சொல்கிறார்கள். திமுக கூட்டணியில் ஒரு 26 கட்சி, அதிமுக கூட்டணியில் 20 கட்சி என 46 கட்சிகளை தனியாக நின்று ஜெயித்த தவெக, இடைத்தேர்தலுக்குப் பயப்படுமா? பேசுபவர்கள் பேசட்டும், நாம் ஜெயித்துக்கொண்டு போய்க்கிட்டே இருக்கவேண்டும்.
ஒரு பைசா கூட கொடுக்காமல் வாக்கு சேகரித்து வருகிறோம். எங்கள் தலைவர் மீதும் எங்களின் மீதும் அன்பு வைத்திருப்பவர்களிடம் காசு கொடுத்து நாங்கள் ஓட்டு வாங்க வேண்டுமா? திமுகவினர் தலைக்கு ரூ.500 கொடுத்து கூட்டத்தை கூட்டுகின்றனர். 50 வருடக் கலாச்சாரத்தை 2026ல் உடைத்து எறிந்தார் நம் அண்ணன் விஜய்.
முதல்வர் விஜய் பயந்துவிட்டார், அதனால் தான் ஊர் ஊராகப் போகிறார் என்கிறார்கள். முன்பு எங்கள் தலைவரை பிரச்சாரம் செய்ய போக விடவில்லை. போலீசை வைத்து அனுமதி மறுத்தீர்கள். அத்தனை தொகுதிக்கும் போகவிட்டிருந்தால் 234 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்.
ஆபாச வார்த்தைகளைப் பேசுவதில் மகன் 8 அடி பாய்ந்தால், தந்தை 15 அடி பாய்கிறார். தான் ஏதோ சூப்பர் ஸ்டார் போல் இருப்பதாக நினைத்து மற்றவர்களை உருவ கேலி செய்கிறார் மு.க.ஸ்டாலின். ஆபாச பேச்சில் மகனை மிஞ்சிவிட்டார் ஸ்டாலின். தந்தையும் மகனும் அழுதுகொண்டே இருங்கள்." எனப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications
