Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிடிசிபி போல் சி.எம்டிஏவில் கட்டிடங்களுக்கு ஆன்லைனில் திட்டஅனுமதி -ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

டிடிசிபி, ஸ்டாலின், சிஎம்டிஏ, DTCP, CMDA, Mk Stalin டி.டி.சி.பி. போல் சி.எம்.டி.ஏ.வில் கட்டிடங்களுக்கு ஆன்லைனில் திட்ட அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: DTCP-யால் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள மனைப்பிரிவு ஒப்புதலுக்கான ஆன்லைன் முறை, விரைவில் CMDA-விலும் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற CREDAI FAIRPRO 2023-ல் கலந்து கொண்டு பேசிய அவர் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் திட்ட அனுமதிக்காக யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகாது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு;

கிரெடாய் மாநாடு

கிரெடாய் மாநாடு

சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, புதிய தொழில் நிறுவனங்கள் வருகை போன்றவற்றால், அவர்களுக்கான வாழ்விடங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான இடங்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கேற்ப வீடுகள் மற்றும் வணிக இடங்களை உருவாக்கி வழங்கிடும் முக்கிய பொறுப்பை கிரெடாய் ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் என்கிற முறையில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

 வீட்டு வசதி

வீட்டு வசதி

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் மூலமாக திட்டங்களைத் தீட்டி, கொள்கைகளை வகுத்து, நகர்ப்புற வளர்ச்சிப் பணிகள் மற்றும் வீட்டு வசதி தேவைகளை பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

தடையின்மைச் சான்று

தடையின்மைச் சான்று

கட்டடங்கள் கட்டுவதற்கு, மனைப் பிரிவிற்கு மற்றும் மனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை விரைவுபடுத்தும் விதமாக, திட்ட அனுமதி வழங்குவதில் ஒற்றைச்சாளர முறையை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், நகராட்சி நிருவாக இயக்ககம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் மற்றும் தடையின்மைச் சான்று வழங்கக்கூடிய துறைகள்.

DTCP -CMDA

DTCP -CMDA

இந்த ஒற்றைச் சாளர முறையில் இணைத்து, தமிழ்நாட்டில் எந்தப் பகுதியாக இருந்தாலும், பொது மக்கள் திட்ட அனுமதிக்கான ஒப்புதலை எளிதில் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆன்லைன் மூலம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக, DTCP மற்றும் CMDA பகுதிகளில் உள்ள உயரமான கட்டடம் மற்றும் உயரம் குறைந்த கட்டடத்திற்கு ஆன்லைன் மூலமாக திட்ட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. DTCP-யால் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள மனைப்பிரிவு ஒப்புதலுக்கான ஆன்லைன் முறை, விரைவில் CMDA-விலும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+