வல்லரசுகளே நடுங்குது மோடியை பார்த்து.. எதிர்த்து நிற்கும் ஒரே வலிமையான தலைவர் ஸ்டாலின்: ஆ.ராசா பரபர
சென்னை : பிரதமர் மோடியைக் கண்டு வல்லரசு நாடுகளே பயந்தாலும் கூட இந்தியாவை மதவாதம், ஊழல்களில் இருந்து காப்பாற்ற மோடிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியுள்ளார்.
தாம்பரத்தில் திமுக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொது செயலாளருமான ஆ.ராசா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு திமுக அரசின் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "அதானி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதற்கு பாஜக இன்னும் பதில் தரவில்லை. 15 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாட்டில் உள்ள 140 கோடி மக்களை மதிக்கவில்லை. 140 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாடாளுமன்றத்தை முடக்கலாமா? அதனால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்கும் பிரச்சனை, ஆன்லைன் ரம்மியால் 43 பேர் உயிரிழப்பு, நீட் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் இங்கு உள்ளது. அவை நாடாளுமன்றத்தில் பேசப்படாமல் முடக்கப்படுள்ளது. திராவிட இயக்க தலைவர்கள் கற்று வந்ததை களவாட மோடி துணையுடன் எடப்பாடி பழனிசாமி கும்பல் வருகிறது. ஆனால் அவர்களை விரட்டி மு.க.ஸ்டாலின் போலீஸ் போல் இருந்து காப்பாற்றுகிறார்.
பிபிசி சேனல் தயாரித்த ஆவணப்படம் தடை செய்யப்பட்டதற்கு ஒரு வார்த்தை கூட கண்டனம் தெரிவிக்காமல் உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து அரசுகளே மவுனம் சாதித்தன. ஆனால் முக.ஸ்டாலின் மட்டுமே அதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்தார். மோடியின் செயல்களுக்கு வல்லரசு நாடுகள் பயந்தாலும் இந்தியாவை மதவாத, ஊழல்களில் இருந்து காப்பாற்றும் நிலையான ஒரே தலைவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து மோடிக்கு எதிராகச் செயல்படுகிறார்." எனப் பேசியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications