சூறாவளி.. அடுத்த 2 நாளில் ஆட்டத்தை தொடங்கும் முதல்வர் ஸ்டாலின்.. 40 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்!
சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் நாளை மறுநாள் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார். தினமும் 2 தொகுதிகள் என 40 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார் ஸ்டாலின்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க நேரடியாகப் போட்டியிடுகிறது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி, விருப்ப மனுக்களை பெற்றுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் மேலிடத்திற்குச் சென்றுள்ளது. நாளை இரவு தமிழ்நாட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம் திமுக தலைமைக் கழகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22ஆம் தேதி முதல் தினமும் 2 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் ஸ்டாலின்.
வரும் 22ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின். சென்னையில் அடுத்த மாதம் 17ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் ஸ்டாலின். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நேரில் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம்:
22.03.2024 (வெள்ளிக்கிழமை) - திருச்சி,பெரம்பலூர்
23.03.2024 (சனிக்கிழமை) - தஞ்சை,நாகை
25.03.2024 (திங்கட்கிழமை) - கன்னியாகுமரி, திருநெல்வேலி
26.03.2024 (செவ்வாய்கிழமை) - தூத்துக்குடி இராமநாதபுரம்
27.03.2024 (புதன் கிழமை) - தென்காசி விருதுநகர்
29.03.2024 (வெள்ளிக் கிழமை) - தருமபுரி, கிருஷ்ணகிரி
30.03.2024 (சனிக்கிழமை) - சேலம், கள்ளக்குறிச்சி
31.03.2024 (ஞாயிற்றுக் கிழமை) - ஈரோடு நாமக்கல் கரூர்
02.04.2024 (செவ்வாய் கிழமை) - வேலூர், அரக்கோணம்
03.04.2024 (புதன் கிழமை) - திருவண்ணாமலை, ஆரணி
05.04.2024 (வெள்ளிக்கிழமை) - கடலூர், விழுப்புரம்
06.04.2024 (சனிக் கிழமை) - சிதம்பரம்,மயிலாடுதுறை
07.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) - புதுச்சேரி
09.04.2024 (செவ்வாய் கிழமை) - மதுரை, சிவகங்கை
10.04.2024 (புதன் கிழமை) - தேனி, திண்டுக்கல்
12.04.2024 (வெள்ளிக் கிழமை) - திருப்பூர், நீலகிரி
13.04.2024 (சனிக் கிழமை) - கோவை, பொள்ளாச்சி
15.04.2024 (திங்கட் கிழமை) - திருவள்ளூர் வடசென்னை
16.04.2024 (செவ்வாய் கிழமை) - காஞ்சிபுரம், திருபெரும்புதூர்
17.04.2024 (புதன் கிழமை) - தென்சென்னை, மத்திய சென்னை



-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications