ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால்: முதல்வர்கள் தோல்வி-க்கு SIR தான் காரணமா?
5 மாநில தேர்தல் முடிவில் பஜேபி 3 மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. இதேவேளையில் இந்த தேர்தல்களில் முதல்வர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய மூன்று முதல்வர்களும் தங்கள் ஆட்சியை இழந்ததுடன், சொந்தத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
இவர்களின் தோல்விக்கான வாக்கு வித்தியாசத்தை விட, எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையில் நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது மூலம் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளதாக கருத்து நிலவி வருகிறது.

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முக.ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்றார். தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் 8,795 மட்டுமே. ஆனால், இதே தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 1.02 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இது பெரிய பாதிப்பை முக.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் செய்துள்ளது.
திமுகவின் கோட்டை என அழைக்கப்படும் சென்னையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரிய அதிர்ச்சியை தமிழ்நாடு அரசியலுக்கு கொடுத்துள்ளது. 16 இடங்களில் 14 இடத்தில் தவெக வென்றுள்ளது.
பவானிபூரில் மம்தா பானர்ஜி தோல்வி
மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 58,812 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜகவின் சுவேந்து 73,917 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் என்னவோ 15,105 தான், ஆனால் இந்தத் தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் 51,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 23.3 சதவீதம் முஸ்லீம் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் கெஜ்ரிவால் தோல்வி
2025 பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் புதுதில்லி தொகுதியில் 25,999 வாக்குகள் பெற்றார். பாஜகவின் பர்வேஷ் சிங் 30,088 வாக்குகளுடன் 4,089 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், இந்தத் தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையில் 37,558 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
ஸ்டாலின், மமதா, கெஜ்ரிவால் ஆகிய 3 முதல்வர் தொகுதியிலும் எஸ்ஐஆர் நடவடிக்கையின் வாயிலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
5 தேர்தல் முடிவுகளின் பின்னணி
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் தவெக, அஸ்ஸாமிலும் மேற்கு வங்கத்திலும் பாஜக, கேரளாவில் காங்கிரஸ், புதுவையில் என்ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி, மேற்கு வங்கத்தில் பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளன. கேரளாவில் பினராயி விஜயன் மட்டும் தனது தொகுதியில் வெற்றி பெற்றாலும், மற்ற மூன்று முதல்வர்களும் ஆட்சியை இழந்ததுடன் சொந்தத் தொகுதிகளிலும் தோற்றனர்.
இந்த மூவரின் தோல்வியும், நீக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையும் 2026 தேர்தலில் குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.















Click it and Unblock the Notifications