“தூள்”.. தலித்களுக்கு மரியாதை, இலங்கை தமிழர், சுங்கக்கட்டணம்! மோடியிடம் ஸ்டாலினின் 13 கோரிக்கைகள்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் தனியாக சந்தித்து பேசிய நிலையில், தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களுக்கான 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி இருக்கிறார். இதில் இலங்கை தமிழர் விவகாரம், மீனவர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்று உள்ளன.
தெலுங்கானா பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அரசு மரியாதைபடி வரவேற்றனர்.

மோடி சென்னை வருகை: அதை தொடர்ந்து சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டி அமைந்து உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தனியாக சந்திப்பு: அடுத்ததாக சென்னை பல்லாவரத்தில் மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் சென்ற மோடியை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டுக்கு தேவையான பல்வேறு முக்கிய கோரிக்கைகளை அவர் வலியுறுத்தி மனு வழங்கி உள்ளார். அதில் பல்வேறு துறைகள் சார்ந்து 13 முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்று இருக்கின்றன.
13 கோரிக்கைகள் என்ன?: 1. சென்னை மெட்ரோ இரயில் திட்டம்-கட்டம்-2 பங்களிப்பு முறை குறித்து கோரிக்கை
2. தமிழ்நாட்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளை நடத்த கோரிக்கை
3. விமான நிலைய விரிவாக்கத்திற்கான பாதுகாப்புத்துறை நிலங்களை இலவசமாக வழங்க வேண்டுகோள்
4. இராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல இரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தல்
5. காலணி உற்பத்திக்கான புதிய உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகைத் திட்டத்துக்கு வேண்டுகோள்
6. தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சாதிப்படியலில் 'ன் (N)', 'க(KA)' என முடிவடையும் பெயர்களை ர்{R)" விகுதியுடன் மாற்றக் கோரிக்கை.

7. பி.எம் மித்ரா பூங்காவின் முதன்மை மேம்பாட்டாளராக சிப்காட்டினை நியமிக்க வலியுறுத்தல்
8. கடலோரக் காற்றாலை மின்னுற்பத்தி - பெரும்பங்கை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுகோள்
9. தமிழ்நாட்டில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையத்தை சென்னையில் அமைக்க கோரிக்கை
10. சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தல்.
11. ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் கோரிக்கை
12. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் - ஈழத் தமிழர்களுக்குச் சமமான குடிமுறை மற்றும் அரசியல் உரிமைகள் அளித்திட இலங்கை அரசை வற்புறுத்துதல்
13. பாக் வளைகுடா பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்த மற்றும் அவர்கள் பாதுகாப்பினை உறுது செய்தல்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications