வாரிசுகளுக்கும் பதவி இருக்காது போல.. சீனியர்களிடம் ஆலோசித்த ஸ்டாலின்.. திமுகவில் நடக்கும் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக கட்சியின் சீனியர்களை நேரில் வரவழைத்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அந்த ஆலோசனையின் போது கட்சியின் நலன் கருதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்கப் போகிறேன் என்றும், தேர்தலின் போது சீனியர்கள் பேச்சை கேட்டுதானே வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் செய்தேன்.. அவர்கள் ஏன் வெல்லவில்லை என்றும் கேட்டுள்ளார்.

திமுகவின் செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்த்தப்பட்டதோடு, வயது வரம்பும் 70ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளைச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை மாற்றங்கள் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

Stalin

இதனால் திமுகவின் சீனியர்கள் மொத்தமாகவே ஆடி போயிருக்கின்றனர். ஏனென்றால் எவ வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், காந்தி, எஸ்ஆர் சிவலிங்கம், தளபதி, ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பதவியை இழக்கப் போகிறார்கள். திமுகவின் செயற்குழு தீர்மானத்தின் போது 96 மாவட்டச் செயலாளர்களுக்கு 2 தொகுதிகளும், 14 மாவட்டச் செயலாளர்களுக்கு 3 தொகுதிகளும் பிரிக்கப்படும்.

77 மாவட்டச் செயலாளர்களில் 13 பேர் பதவியை இழப்பதால், சுமார் 46 புதிய மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். ஸ்டாலினின் இந்த முடிவுக்கு முதலில் சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்டாலின் எதற்கும் அசரவில்லை என்று தெரிகிறது. துரைமுருகன் உட்பட அத்தனை சீனியர்களுடனும் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அந்த ஆலோசனையின் போது, திமுகவில் செய்யப்படும் மாற்றங்களில் பலருக்கும் உடன்பாடு இருக்காது தான். ஆனால் கட்சியின் நலன் கருதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்கப் போகிறேன் என்று நேரடியாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தலின் போது வேட்பாளர்கள் பட்டியலை கடைசி நேரத்தில் சீனியர்கள் சிபாரிசுகளை அறிவித்து மாற்றினேன்.

அப்படி சிபாரிசு செய்யப்பட்டவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை என்று போட்டு உடைத்திருக்கிறார். இதனால் சீனியர்கள் அத்தனை பேருமே கப்சிப் மோடில் இருந்திருக்கின்றனர். இதனால் அடுத்தக் கட்டமாக தங்களின் வாரிசுகளுக்கு பொறுப்பு கேட்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கின்றனர். அதற்கு ஸ்டாலின் சம்மதிப்பாரா என்ற கேள்வியும் அவர்களிடம் அதிகமாகவே எழுந்திருக்கிறது.

ஏனென்றால் புதிய மாவட்டச் செயலாளர்கள் கொண்டு வரப்படுவதே பவர் செண்டர்களின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தான். மீண்டும் வாரிசுகளுக்கு பதவி கொடுத்தால், அவர்கள் மூலமாக சீனியர்கள் ஆட்டம் போடுவார்கள் என்பதையும் ஸ்டாலின் உணர்ந்துள்ளார். இதனால் வாரிசுகளுக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படுமா என்ற சந்தேகமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+