Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிக டிசைடிங் ஃபேக்டர்.. 2026 தேர்தலில் கட்சி ஸ்டாலின் பக்கமா? மோடி பக்கமா? விஜயகாந்த் வேற இல்லயே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் சில நேரங்களில் ஓட்டுக்களை விட, சில கட்சிகளின் கூட்டணி முடிவுகளே தேர்தலின் திசையை மாற்றிவிடக்கூடும்.. அந்த வகையில், இன்று தேமுதிக எடுக்கப்போகும் கூட்டணி முடிவு, அதன் எதிர்காலத்தை மட்டும் அல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலின் அரசியல் சமநிலையையும் தீர்மானிக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. எப்படி தெரியுமா?

விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, தேமுதிக அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்ட கட்சி என்ற பார்வை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களில் நடந்த சம்பவங்கள் அந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றி விட்டன.

DMDK Stalin Modi

பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தது, விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றது கவனிக்கத்தக்கது..

பாஜக, திமுக, தவெக

அதேபோல, பாஜக மூத்த தலைவர்கள் தேமுதிகவை என்டிஏவில் இணைக்க அழைப்பு விடுத்தது, இன்னொரு பக்கம் நடிகர் விஜய் தொடர்ந்து விஜயகாந்தை நினைவுகூரும் அரசியல் பன்ச்களை பயன்படுத்துவது, இவை அனைத்துமே ஒரே மாதிரியான பிம்பத்தை தந்துள்ளது.. இதன்மூலம் தேமுதிக இன்னும் அரசியல் மதிப்பை இழக்கவில்லை என்பதும் தெரியவருகிறது..

இன்றைய சூழலில், தேமுதிக ஒரு கட்சியாக பலம் வாய்ந்ததா இல்லையா என்பதை காட்டிலும், அது எந்த பக்கம் செல்லும் என்பதே அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. காரணம், ஒரு பக்கம் திமுக தலைமையிலான ஆளும் கூட்டணி. மற்றொரு பக்கம் அதிமுக - பாஜக தலைமையிலான எதிர்க்கூட்டணி. இந்த இரண்டு அணிகளுக்கும் நடுவே தேமுதிக ஒரு "டிசைடிங் ஃபேக்டர்" ஆக பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் விஜயகாந்த்

இதில் திமுக தரப்பு, அரசியல் ரீதியாக ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி முழுமையாக ஒருங்கிணைந்தால், அதில் தேமுதிக போன்ற கட்சி இணைந்தால், அது தேர்தலில் கடுமையான சவாலாக மாறும்.

குறிப்பாக, விஜயகாந்தின் நினைவுச் செல்வாக்கு இன்னும் கிராமப்புறங்களில் உயிருடன் இருக்கிறது என்பதை திமுக நன்றாகவே உணர்ந்துள்ளது.. அதனால் தான் தேமுதிக அந்த பக்கம் செல்லாமல் தடுக்க திமுக முயற்சி செய்கிறது.

அதே நேரத்தில், திமுகவில் கூட்டணியில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான தொகுதிகள், அரசியல் மரியாதை, எதிர்கால பாதுகாப்பு என பல எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த சூழலில், தேமுதிக எதிர்பார்க்கும் அளவுக்கு சீட்டுகளை திமுக வழங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை.

தனித்த அடையாளம்

திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி நிச்சயம், ஆனால் தேமுதிக தன்னுடைய தனித்த அடையாளத்தை மெல்ல இழக்கும் நிலைமையும் உள்ளது.. அதுமட்டுமல்ல, தேமுதிக எதிர்பார்ப்பது "அரசியல் இடம்" மட்டுமே.. அதாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவி, கட்சியின் எதிர்கால பாதுகாப்பு, தேசிய அரசியலில் இடம் போன்ற விஷயங்களையும் கணக்கிடுகிறது.

எனவே தற்போதைய சூழலில் திமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் வாய்ப்புகளே அதிகம் என்று தெரிகிறது. சீட் எண்ணிக்கை, தொகுதி செலவுகள், தேர்தல் வேலைப்பாடுகள் இப்படி அனைத்துமே அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு எளிதாக கிடைக்கலாம்..

5ம் தேதி என்ன முடிவு?

இப்படிப்பட்ட சூழலில்தான், ஜனவரி 5-ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை தேமுதிக நடத்த போகிறது.. இந்த கூட்டத்தில் கிளம்பும் மெஜாரிட்டி கருத்துகளே, ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டிலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது..

இப்போதைக்கு திமுகவா? அதிமுகவா? தவெகவா? என்ற குழப்பத்தில் தேமுதிக இருந்தாலும், வரும் 5ம் தேதி எடுக்கப்போகும் முடிவு, அந்த கட்சியின் எதிர்காலத்தை மட்டுமல்ல, 2026 தமிழக அரசியலின் திசையையும் மாற்றக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+