Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியும் நன்றி சொல்லலாமா? ‘ஆர்ட்டிஸ்ட்னு காட்டிட்டாங்க’ - இலவச டிக்கெட்களால் ஸ்டாலினை வரைந்த பெண்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தைச் செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'இலவச பயணச்சீட்டு'களை கொண்டே ஸ்டாலின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச பயணம் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததுமே செயல்படுத்தினார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.

பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டணமில்லா பயணச் சீட்டுகளைக் கொண்டே ஸ்டாலின் உருவத்தை உருவாக்கியுள்ளார் மைக்ரோ ஆர்ட்டிஸ்ட் பெண்.

முதல் கையெழுத்து

முதல் கையெழுத்து

தமிழக முதலமைச்சராக கடந்த ஆண்டு மே மாதம் 7அம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அன்றே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தக் கையெழுத்திட்டார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியை செயலாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் 2021 மே மாதம் 8ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களின் வரவேற்பு

பெண்களின் வரவேற்பு

பெண்களைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த சீரிய திட்டத்தால் பல லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கட்டணமில்லா டிக்கெட்

கட்டணமில்லா டிக்கெட்

பயணம் இலவசம் என்றாலும் எந்தெந்த வழித்தடத்தில், எந்தெந்த பிரிவில், எத்தனை பேர் பயணித்தனர் என்ற புள்ளி விவரத்திற்காக பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், மற்றும் அவரது உதவியாளர்கள் சாதாரண நகரப் பேருந்துகளில் பயணிக்கும்போது கட்டணமில்லா பேருந்துச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

மைக்ரோ ஆர்டிஸ்ட்

மைக்ரோ ஆர்டிஸ்ட்

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுப்ரஜா சரவணன் என்ற பெண் ஓவியராக இருந்து வருகிறார். மிகச்சிறிய பொருட்களில் ஓவியங்கள் வரையும் மைக்ரோ ஆர்ட்டிஸ்ட்டான சுப்ரஜா, சென்னையில் ஓவியக் கலைஞராகப் பணியாற்றி வந்த நிலையில், தனது தினசரி பயணத்துக்கு நகரப் பேருந்துகளையே பயன்படுத்தி வந்துள்ளார்.

டிக்கெட்களில் ஸ்டாலின் உருவம்

டிக்கெட்களில் ஸ்டாலின் உருவம்

மகளிருக்கு இலவச பயணம் திட்டத்தால் பயனடைந்த சுப்ரஜா, தான் பேருந்தில் பயணித்தபோது வழங்கப்பட்ட கட்டணமில்லா பயணச்சீட்டுகளை சேகரித்து வந்துள்ளார். அந்தச் சீட்டுகளை வைத்தே முதல்வர் ஸ்டாலினின் உருவத்தை வரையலாமே என யோசித்த சுப்ரஜா, பயணச் சீட்டுகளை கிழித்தும், ஒட்டியும், ஸ்டாலினின் ஓவியத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

தான், இலவச பயணச் சீட்டுகளைக் கொண்டு ஸ்டாலின் உருவத்தை உருவாக்கிய காட்சியை வீடியோவாகப் பதிவு செய்து ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார் சுப்ரஜா. "முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இலவச பேருந்து திட்டத்திற்கு. நான் சென்னையில் ஓவியக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியபோது, ​​இந்தத் திட்டம் உதவியாக இருந்தது." என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவு தீயாகப் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+