Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தனுக்கு கிடைத்த கவுரவம்! புது வீடு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தையும், இலக்கியச் செல்வருமான குமரி அனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் புது வீடு வழங்கி அவரை கவுரப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

குமரி அனந்தன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் சென்னை அண்ணா நகரில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அவர் ஆற்றிய தொண்டுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் இந்த வீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இலக்கியச் செல்வர்

இலக்கியச் செல்வர்

இலக்கியச் செல்வர் என்றழைக்கப்படும் குமரி அனந்தன் காமராசரின் அருமந்த சீடராக இருந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். மேலும், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர், பதினேழு முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம், இலக்கியக் கடல், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மல் என பல சிறப்புகளுக்கு உரியவர் குமரி அனந்தன்.

புதிய வீடு

புதிய வீடு

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர் குமரி அனந்தன். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து வரும் அவருக்கு தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் சார்பில் அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் ஸ்டாலின் குமரி அனந்தனிடம் நேரடியாக வழங்கினார்.

குமரி அனந்தன் கோரிக்கை

குமரி அனந்தன் கோரிக்கை

குமரி அனந்தன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த புதிய வீட்டை வழங்கியுள்ளது. அரசியல் பொதுவாழ்வில் அப்பழுக்கற்ற பண்பாளராக இருக்கும் இவர், தனது மகள் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநராக இருந்தாலும் கூட எளிய வாழ்வியல் முறைகளை பின்பற்றக் கூடியவர். கதர் ஆடைகளை மட்டுமே அணிந்து வரும் இவர் காமராஜரின் அடியொற்றி அரசியல் பழகியவர்.

பனைப் பொருட்கள்

பனைப் பொருட்கள்

தற்போது பனைப் பொருட்களுக்காகவும் பனை மரங்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் குமரி அனந்தன், ஒரு காலத்தில் தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் குமரி அனந்தனிடம் புதிய வீட்டுக்கான ஆணையை முதல்வர் வழங்கிய போது, அமைச்சர் முத்துச்சாமியும், வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகனும் உடனிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+