திமுக நகரச் செயலாளரை மாவட்ட பொறுப்பாளராக புரோமோஷன் செய்த ஸ்டாலின்! கனிமொழி எம்.பி. சிபாரிசு!
சென்னை: அதிமுகவில் மட்டுமே யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் வர முடியும் என்று பேசப்படும் நிலையில், திமுகவில் நகரச் செயலாளராக இருந்த ஒருவரை ஒரே இரவில் மாவட்ட பொறுப்பாளராக புரோமோஷன் வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக செயலாளராக இருந்த ஜெயபாலன் என்பவரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு நியமித்து அதனை துரைமுருகன் மூலம் அறிவிக்கவும் வைத்திருக்கிறார் ஸ்டாலின். ஜெயபாலனை மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்ததன் பின்னணியில் கனிமொழியின் கை ஓங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுரண்டை ஜெயபாலனை பொறுத்தவரை கனிமொழியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். அவருக்காக கனிமொழி செய்த சிபாரிசை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டதோடு, உதயநிதி ஸ்டாலினும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம் சிவபத்மநாதன் மீது தொடர்ச்சியாக எழுந்த புகார்களே ஆகும்.
சிவபத்மநாதன் மீதான நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற தென்காசி மாவட்ட திமுக பொறுப்பு அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கடுமையாக முயற்சித்திருக்கிறார். ஆனாலும் அதனை மீறி இந்த அதிரடி ஆக்ஷனை எடுத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.இதன் மூலம் இனி அடுத்தடுத்த மாற்றங்களும் திமுகவில் அரங்கேறலாம் எனத் தெரிகிறது. இதனால் புகாருக்குள்ளான திமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதனிடையே தென்காசி மாவட்ட திமுகவை பொறுத்தவரை துரை, செல்லத்துரை, சிவபத்மநாதன், என மூன்று மாவட்டச் செயலாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அங்கு நிலவும் கோஷ்டிப்பூசல் தான்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications