ஊஞ்சல்..தேன்சிட்டு..கனவு ஆசிரியர்.. மாணவர்கள்-ஆசிரியர்களை பக்குவப்படுத்த பருவ இதழ்கள்! புது முயற்சி!
சென்னை: பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பக்குவப்படுத்துவதற்காக ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என்ற 3 பருவ இதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு இதழ்களில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கனவு ஆசிரியர் என்ற இதழில் ஆசிரியர்களின் படைப்புகள், வகுப்பறை அனுபவங்கள், அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகள் வெளியிடப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

பள்ளிக்கல்வித் துறை
குழந்தைகளின் அறிவுக்கண்களைத் திறப்பது வாசிப்புப் பழக்கம். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இவ்வுலகை அறிந்து கொள்ளவும் சமூகம் குறித்த புரிதலை மாணவர்களிடையே உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கென பருவ இதழ்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.

ஊஞ்சல் -தேன்சிட்டு
அதன்படி, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'ஊஞ்சல்' என்கிற இதழும், ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 'தேன்சிட்டு' என்கிற இதழும் மாதமிருமுறை இதழாக வெளியிடப்படுகிறது. குழந்தைகளின் ஆக்கங்களோடு, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள், செய்திகள், சுவையான கதைகள் போன்றவை இவ்விதழ்களில் வெளியிடப்படும்.

கனவு ஆசிரியர்
இவை மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கென தனியே 'கனவு ஆசிரியர்' என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்படுகிறது. ஆசிரியர்களின் படைப்புகளோடும் வகுப்பறை அனுபவங்களோடும் அவர்களுக்கான சிறப்புக் கட்டுரைகளோடும் 'கனவு ஆசிரியர்' இதழ் வெளியாகவிருக்கிறது.
'ஊஞ்சல்', 'தேன்சிட்டு', 'கனவுஆசிரியர்' ஆகிய மூன்று இதழ்களையும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட பள்ளிக் குழந்தைகளும், ஆசிரியர்களும் இதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

சட்டசபை கூட்டத் தொடர்
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை மானியக் கூட்டத் தொடரின் போது மேற்கண்ட இதழ்கள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அடுத்த சட்டசபை கூட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே அன்று சொன்னதை நிறைவேற்றிக் காட்டியுள்ளார் அவர்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications