ஸ்டாலின் அப்படி சொன்னதும்.. மனசு மாறிய ராகுல் காந்தி.. முக்கிய தலையை பொறுப்பிலிருந்து தூக்க முடிவு!
சென்னை: தமிழக அரசியலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி குறித்த சலசலப்புகள் நீடித்து வரும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய பேச்சால் ராகுல் காந்தி நெகிழ்ந்து போயுள்ளதாகத் தெரிகிறது. இதன் விளைவாக, கூட்டணியை வலுப்படுத்த காங்கிரஸ் தலைமை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து எப்போது வேண்டுமானாலும் தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போன் போட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் ராகுல் காந்தி மனம் மாறி உள்ளதாக தெரிகிறது.

ஸ்டாலினின் 'பாசப் போராட்டம்': ராகுல் காந்தி நெகிழ்ச்சி
சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகுல் காந்திக்கும் தனக்கும் இடையிலான உறவு அரசியல் கடந்தது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். "அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை தனது மூத்த சகோதரராகப் பார்க்கிறார்; நானும் அவரை அப்படித்தான் கருதுகிறேன். அவர் என் குடும்பத்தில் ஒருவர்," என்று ஸ்டாலின் உருகியிருந்தார்.
இந்த 'சென்டிமென்ட்' பேச்சு டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியை உடைக்க நடக்கும் சதித் திட்டங்களை இருவரும் அறிவோம் என ஸ்டாலின் கூறியது, ராகுல் காந்தியை சமாதானப்படுத்தியதோடு, தி.மு.க-வுடன் இணக்கமாகச் செல்லும் முடிவை எடுக்க வைத்துள்ளது. ஸ்டாலின் பேச்சால் ராகுல் இறங்கி வந்துள்ளாராம்.
கிரிஷ் சோடன்கர் மாற்றம்? - வேணுகோபால் வருகை
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடன்கர் செயல்பாடுகள் தி.மு.க தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் தேவையற்ற குழப்பங்களை விளைவிப்பதாகக் கருதிய காங்கிரஸ் தலைமை, இப்போது சமரச முயற்சியில் இறங்கியுள்ளது. ராகுலின் மனமாற்றமே இதற்கு காரணம் என்கிறார்கள்.
புதிய தூதுவர்: கிரிஷ் சோடங்கருக்குப் பதில், ராகுலுக்கு நெருக்கமான கே.சி. வேணுகோபால் வரும் 17-ம் தேதி சென்னை வருகிறார்.
மாவட்டத் தலைவர்கள் கூட்டம்: சென்னையில் நடைபெறும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் வேணுகோபால் கலந்து கொண்டு கருத்துகளைக் கேட்க உள்ளார்.
இறுதி முடிவு: இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே தேர்தல் கூட்டணி மற்றும் இடப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
அதிகாரப் பகிர்வு: தற்போதைய நிலை என்ன?
காங்கிரஸ் தரப்பில் பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் 'அதிகாரத்தில் பங்கு' வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
காங்கிரஸ் கோரிக்கை
குறைந்தது 35 சட்டப்பேரவைத் தொகுதிகள் வேண்டும். ஆட்சியில் பங்கு அல்லது வாரியத் தலைவர் பதவிகள். உள்ளாட்சிப் பதவிகளில் இப்போதே ஒப்பந்தம். ஆட்சி அதிகாரத்தில் குறைந்தது 2-3 அமைச்சர்கள் பதவி வேண்டும்.
தி.மு.க-வின் பதில்
கடந்த முறையை விட கூடுதல் இடங்கள் தருவது கடினம் எனத் தகவல். கூட்டணி ஆட்சிக்குத் தமிழ்நாட்டில் இடமில்லைஎன திட்டவட்டம் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பரிசீலிக்கலாம் என்ற மென்மையான போக்கு.
கூட்டணி உடையுமா?
அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி முறிந்து போவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. தேசிய அரசியலில் தி.மு.க ஒரு நம்பிக்கைக்குரிய நட்பு சக்தி என்பதால், தமிழக காங்கிரஸின் ஒரு சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கூட்டணியைத் தொடரவே ராகுல் காந்தி விரும்புவதாகத் தெரிகிறது.
-
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
அரசியல் பிரபலங்களுக்கும் TN 2026 பட கேரக்டர்களுக்கும் இருக்கும் ஒற்றுமை! நீச்சல் குளத்தை கவனிச்சீங்களா? -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications