தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் மண் அள்ளி போடுவதா.. மின்வாரிய தனியார்மயத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு!
சென்னை: தமிழக மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவில் மண் அள்ளிப் போடும் இருள் சூழ்ந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வீண் தம்பட்டம்
'யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து ஒளித்து வை' என்பதுபோல, மின்மிகை மாநிலம் என்று எந்தச் செயல்முறை அடிப்படையும் இல்லாமல், தனக்குத்தானே வீண் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசும், அதன் மின்துறை அமைச்சரும், பல கோடிக்கணக்கில் ஊழல் செய்வதற்காக, மின்வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாகத் திட்டமிட்டுத் தனியாருக்குத் தாரைவார்த்துவரும் நிலையில், தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவிலும் மண் அள்ளிப்போடும் மாபாதகச் செயல் அரங்கேறுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

தாரைவார்ப்பு
புதிய துணை மின் நிலையங்களைத் தனியாருக்கு 2 ஆண்டுகால ஒப்பந்தத்தில் தாரைவார்த்துள்ள ஆட்சியாளர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 650 மின் விநியோக உபகோட்டங்களில் உள்ள பணிகளுக்கு, அவசர அவசரமாக ஒரு கோட்டத்திற்கு 1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கு உள்நோக்கத்துடன் ஒப்பந்தம் போடுவது, மின்சாரத் தாக்குதலுக்கு ஒப்பான அதிர்ச்சியை அளிக்கிறது.

ஹைவோல்ட்
இந்த ‘ஹைவோல்ட்' அதிர்ச்சியின் பின்னணியில் இருப்பது, தனியார் நிறுவனங்களுடன் ஆட்சியாளர்கள் நடத்தியுள்ள பேரமும், அதனால் ஐ.டி.ஐ. படித்த தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு அநியாயமாகப் பறிபோவதும்தான். மின்வாரியத்தில் ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 380 ரூபாய் தினக்கூலியைத் தர மறுக்கும் தமிழக அரசு, தனியாரிடம் தினக்கூலிக்கு அளிக்க வேண்டிய தொகை ரூ.412 என அதிகப்படுத்தி ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன?

குறைந்த கூலிக்கு
வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு வேலைக்கு வரத் தயாராகியுள்ள நிலையில், ஒப்பந்தத்தைவிடக் குறைவான கூலி தந்து அவர்களைப் பணியில் அமர்த்தி, தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் - ஏற்கனவே ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருப்பவர்களின் வயிற்றிலடிக்கும் செயலை எடப்பாடி பழனிசாமி அரசு இதயம் இல்லாமல் மேற்கொண்டுள்ளது. தனியார் மூலமாக அனுபவமில்லாத பணியாளர்களைக் குறைவான கூலிக்கு ஒப்பந்தம் செய்யும்போது, பராமரிப்புப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

பெருந்தீங்கு
பிரேக்டவுன் பணிகளை விரைவாகவும் செம்மையாகவும் செய்திட முடியாது. மிக முக்கியமான பராமரிப்புப் பணிகளில் அனுபவமில்லாதோர் ஈடுபடும்போது அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும். மின்தடையை நீக்கி, சீரான மின்சாரம் வழங்குவதிலும் இடர்ப்பாடுகள் அதிகரிக்கும்.

தமிழ்நாடு
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தபோது, அனுபவமற்ற தற்காலிக ஓட்டுநர்களை அ.தி.மு.க. அரசு நியமித்த காரணத்தால், ஆற்றில் இறங்கிய பேருந்துகளையும், மரத்தில் மோதிய பேருந்துகளையும், பாலத்தின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு ஓடியவர்களையும் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்துப் பார்த்துப் பதறிப்போயிருக்கிறது.

பொய் முலாம் பூசி
தனியாருடனான ஒப்பந்தங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு, தனிப்பட்ட முறையில் பெரும் லாபம் தருவதாக இருக்கலாம். அவை தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே இருட்டாக்கக்கூடியவை. மின்துறை வாயிலாக அதனைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டும் அ.தி.மு.க. அரசும், மின்துறை அமைச்சரும், இது தற்காலிகமானது எனப் பொய் முலாம் பூசி உண்மையை மறைப்பதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications