கருணாஸை வைத்து எடப்பாடிக்கு ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின்! டிட்டோ ஜெயலலிதா பார்முலா! தென் மண்டலம் சக்ஸஸ்
சென்னை: தேர்தல் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.. கூட்டணி , சீட் ஒதுக்கீடு போன்றவற்றுக்கு நடுவே, தென் மாவட்ட தகவல் ஒன்று பரபரத்து வருகிறது.. குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகள் தான் 2026-ல் கோட்டைக்கு செல்லும் பாதையை தீர்மானிக்கப் போவதாக கூறுகிறார்கள்..
கடந்த 2021 தேர்தலில் ஏற்பட்ட சறுக்கல்களை சரிசெய்ய எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வியூகம் அமைக்க, மறுபுறம் தமிழக ஆளுங்கட்சி அந்தப் பகுதிகளில் முன்னெடுத்துள்ள நகர்வுகள் அரசியல் வட்டாரத்தையே உற்றுநோக்க வைத்திருக்கின்றன. ஜெயலலிதா காலத்தில் தென் மண்டலம் என்பது அதிமுக-வின் இரும்புப் பிடியில் இருந்தது.

ஆனால், இப்போதைய சூழலில் அங்கு நிலவும் சாதிய ரீதியிலான அதிருப்திகளும், உட்கட்சிப் பூசல்களும் கள நிலவரத்தை மொத்தமாக மாற்றி அமைத்திருக்கின்றன.
குறிப்பாக, தென் மாவட்டங்களின் முக்கிய சமூக வாக்குகளைத் தன் பக்கம் இழுக்க ஆளுங்கட்சி முன்னெடுத்துள்ள நகர்வுகள் மிகவும் நுணுக்கமானவை...
எடப்பாடிக்கு நேரடி சவால்
ஒரு காலத்தில் அதிமுக-வின் முகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை இப்போது தங்கள் பக்கம் சாய்த்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும் ..
ஓபிஎஸ்சுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை விட, "எடப்பாடி தென் மாவட்டத் தலைவர்களை திட்டமிட்டு ஓரம் கட்டுகிறார்" என்கிற பிம்பத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அவரை ஒரு கருவியாக ஆளுங்கட்சி பயன்படுத்த போகிறதாம். இதற்காக எந்தப் பெரிய மெனக்கெடலும் இல்லாமல், ஓபிஎஸ்ஸின் ஆதங்கத்தையே தங்களின் வெற்றிக்கான வாய்ப்பாக மாற்றியுள்ளனர்.
அப்படியே ஜெ.பாணி
அதேபோல், 2016 தேர்தலில் ஜெயலலிதா கையாண்ட அதே பாணியை இப்போது ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது. அதாவது அன்று முக்குலத்து சமூகத்தை சேர்ந்த நடிகர் கருணாஸை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தி வெற்றி பெற வைத்த அதே ஃபார்முலாவை, 10 ஆண்டுகள் கழித்து இப்போது உதயசூரியன் சின்னத்தில் அவரை நிறுத்திச் செயல்படுத்த திமுக யோசிக்கிறதாம்..
இதன் மூலம் "நாங்கள் சமூக ரீதியாக யாரையும் கைவிடுவதில்லை" என்கிற செய்தியை தென் மண்டல வாக்காளர்களிடம் ஆழமாகப் பதிய வைக்கவும் திட்டமிடுகிறதாம்..
எடப்பாடி & டிடிவி தினகரன்
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்போ தனது சொந்த பலத்தையே மலை போல் நம்பிக் காத்திருக்கிறது. பாஜக-வின் அழுத்தத்தினால் டிடிவி தினகரனை மட்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்தாலும், சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸை உள்ளே விடாமல் தடுத்தது எடப்பாடியின் மிக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.. ஆனால், இதுவே அவருக்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவும் மாறியுள்ளது.
சசிகலா இப்போது ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்பை விட, எடப்பாடியை தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒற்றை இலக்கோடு தென் மாவட்டங்களில் ரகசியமாக செயல்பட்டு வருகிறார். முக்குலத்தோர் அமைப்புகளை சந்தித்து அதிமுக-வின் பாரம்பரிய வாக்குகளைச் சிதறடிப்பதற்கான வேலைகளைச் சசிகலா தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் + கருணாஸ்
தென் மாவட்டங்களில் நிலவும் இந்தப் பழிவாங்கும் அரசியலும், சாதியக் கணக்குகளும் 2026 தேர்தலில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கணக்கிடப்படுகிறது..
ஆக, ஓபிஎஸ் மற்றும் கருணாஸ் போன்றவர்களை வைத்து ஆளுங்கட்சி போடும் கணக்குகள், அதிமுக-வின் வாக்கு வங்கியில் எந்தளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்று தெரியவில்லை.. எடப்பாடியின் பிடிவாதமா அல்லது ஆளுங்கட்சியின் இந்த ரகசிய வியூகமா, தென் மண்டலத்தை யார் வசப்படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications