Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினிடம் சொந்தமாக வாகனங்கள் ஏதும் இல்லை என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் பெயரில் அசையும் சொத்து, அசையா சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் சீமான் பெயரில் சொந்த வீடு கூட இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக வேட்புமனுதாக்கல் நேற்று முதல் தொடங்கியது. இது ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 573 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

seeman stalin

முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி சீமான், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுவில் ஒரு வேட்பாளரின் சொத்து விவரங்கள், வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் உள்ளதா என்பன உள்ளிட்ட தகவல்கள் வேட்புமனுவில் இடம் பெற்றிருக்கும்.

அந்த வகையில் ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்ட அவரது சொத்து மதிப்பை பார்க்கலாம். முதல்வர் ஸ்டாலினின் அசையும் சொத்து மதிப்பு ரூ 3.30 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ 4.34 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ 1.32 கோடி அசையும் சொத்துகள் உள்ளது. 720 கிராம் தங்கம் உள்ளதாகவும், கையிருப்பில் 40 ஆயிரம் உள்ளதாகவும் தனது வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னிடம் சொந்தமாக வாகனங்கள், தங்க நகைகள் எதுவும் இல்லை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலினிடம் ரூ 10 ஆயிரம் கையிருப்பு உள்ளதாகவும் அவரின் வருவாய்க்கான ஆதாரம் எம்எல்ஏ ஊதியம், வங்கி வைப்பு நிதி வட்டி என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் பெயரில் குற்ற வழக்குகள் எதுவும் நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்டாலின், அவரது மனைவிக்கு எந்த கடன்களும் இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்டாலின் பெயரில் தஞ்சை அகரத்திருநல்லூரில் 2.86 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் திருவாரூரில் 1.12 கோடி மதிப்பில் நிலம் உள்ளதாகவும் அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாலின் முதல்வரானதும் பயன்படுத்தும் கான்வாய் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆகும்.

அது போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில், அவர் மற்றும் அவரது மனைவி கயல்விழியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாத சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின்படி, சீமானிடம் ரூ.50,000 கையிருப்பு உள்ளது. அதேபோல், அவரது மனைவி கயல்விழியிடம் ரூ.35,000 ரொக்கம் உள்ளது. சீமானின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.39 லட்சமாகும். கயல்விழியின் பெயரில் இருக்கும் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.2.57 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி விவரங்களைப் பார்த்தால், சீமான் 2020-2021 நிதியாண்டில் ரூ.5.12 செலுத்தினார். தொடர்ந்து 2021-2022 மற்றும் 2022-2023 ஆகிய நிதியாண்டுகளில் தலா ரூ.4.9 லட்சம், 2023-2024-ல் ரூ.31 லட்சம், 2024-2025-ல் ரூ6.6 லட்சம் வரி செலுத்தி உள்ளார்.

அரசுக்கு எதிராகப் பேசுதல், சட்டவிரோதக் கூட்டங்களை நடத்துதல் உள்ளிட்ட 24 வழக்குகள் சீமான் மீது நிலுவையிலுள்ளன. வாகனங்களைப் பொறுத்தவரை, ரூ 12 லட்சம் மதிப்புள்ள ஹுண்டாய் வெர்னா கார் சீமானிடம் உள்ளது. கயல்விழியிடம் டொயோட்டா இன்னோவா மற்றும் ஹுண்டாய் க்ரெட்டா கார்கள் உள்ளன.

தங்கம் வகையில், சீமானிடம் ரூ.19.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் உள்ளது. கயல்விழியிடம் ரூ2.08 கோடி மதிப்பிலான 1.6 கிலோ தங்கம் உள்ளது. சீமான் பெயரில் அசையா சொத்து எதுவும் இல்லை; சொந்த வீடு கூட அவருக்கு கிடையாது. எஸ்பிஐ வங்கியில் சீமானுக்கு ரூ 5 லட்சம், அவருக்கு மனைவிக்கு ரூ18 லட்சம் கடன்கள் உள்ளன. கல்வித் தகுதியாக, சீமான் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+