ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு
சென்னை: தமிழக அரசியல் களம் இப்போது தகதகவென தகித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல திமுக மற்றும் அதிமுக தலைமையிலான 2 பெரும் கூட்டணிகள் நேருக்கு நேர் மல்லுக்கட்டும் இந்த தேர்தலில், இதுவரை நாம் பார்த்திராத ஒரு புதிய திருப்பம் டெல்லி வட்டாரங்களில் இருந்து கசிய தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், தரைமட்ட நிலவரங்களை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு உளவுத்துறை (IB) சமர்ப்பித்திருக்கும் சமீபத்திய அறிக்கை, அரசியல் விமர்சகர்களையே புருவம் உயர்த்தச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழக தேர்தல் களத்தின் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஐ.பி. எனப்படும் மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறது. அதிலுள்ள தகவல்கள் திடுக்கிடும் வகையில் இருப்பதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக, தேர்தல் காலங்களில், மத்திய மற்றும் மாநில உளவுத்துறையினர், தேர்தல் கள நிலவரம் குறித்த ரிப்போர்ட்டுகளை தங்களின் மேலிடங்களுக்கு அவ்வப்போது அனுப்பி வைத்தபடி இருப்பார்கள்.
உளவுத்துறை ரிப்போர்ட்
அந்த வகையில், தமிழகத்தின் நிலவரம் குறித்து கடந்த வாரம் ஒரு ரிப்போர்ட் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாஜகவை உள்ளடக்கிய அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி என 2 கூட்டணிகள் தேர்தல் களத்தில் களமாடி வருகின்றன. தங்களின் தோழமைக் கட்சிகளுக்கு திமுகவும், அதிமுகவும் தான் தொகுதிகளை பங்கிட்டுக் கொடுத்துள்ளது. இதனடிப்படையில் தகவல்களை சேகரித்து வந்தது உளவுத்துறை. அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் ஒரு ரிப்போர்ட் டெல்லிக்குப் பறந்துள்ளது.
அதில், ''அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு அதிமுக உழைக்கவில்லை. தோழமைக் கட்சிகளின் தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என அதிமுக தலைமை, தனது கட்சியின் நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவை பிறப்பித்துள்ளதாம்..
தோழமை கட்சிகள்
அதேபோல, திமுக தலைமையும் தனது தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு உத்தரவாதம் தரவில்லை. தோழமைக் கட்சிகள் மயிரிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது திமுக தலைமை.
இந்த கருத்தொற்றுமையில் திமுக தலைமையும், அதிமுக தலைமையும் மறைமுக கூட்டணி வைத்திருக்கின்றன. தேர்தல் முடிவுகளில் தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தோழமைக் கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய சூழல் உருவானால், அப்போது, அவர்களின் அதிகாரம் கோலோச்சும்.
அதனால் அதனை மட்டுப்படுத்த தோழமைக்கட்சிகளுக்கு ஓரிரு இடங்களில் வெற்றிக் கிடைக்கலாமே தவிர 100 சதவீத வெற்றி கிடைக்க கூடாது என்கிற திட்டத்தில் இந்த கருத்தொற்றுமையை திமுகவும் அதிமுகவும் இணைந்துள்ளன'' என்கிற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றனவாம்...!!
திருமாவளவன் - பொற்கொடி
முன்னதாக இதே போன்று உளவுத்துறை குறித்த ஒன்று கசிந்து வருகிறது.. அதாவது திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தது மற்றும் திரு.வி.க. நகர் அதிமுக வேட்பாளர் பொற்கொடிக்கு மறைமுக ஆதரவு அளித்தது குறித்து உளவுத்துறை அறிக்கை அளித்திருக்கிறதாம்.
மேலும், விசிகவின் பலமான பட்டியலின வாக்குகளில் 50 சதவீதம், குறிப்பாக இளைஞர்களின் வாக்குகள் நடிகர் விஜய்யின் கட்சிக்கு இடப்பெயர்ச்சி ஆவதாகவும் அந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால் வரும் தேர்தலில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது கடினம் என உளவுத்துறை எச்சரித்ததாக செய்திகள் கசிந்து வருகின்றன..
இப்படிப்பட்ட சூழலில், தரைமட்ட நிலவரங்களை ஆய்வு செய்து மத்திய உள்துறைக்கு உளவுத்துறை (IB) சமர்ப்பித்திருக்கும் சமீபத்திய அறிக்கையானது அதற்கு மேல் பரபரப்பை தந்து வருகிறதாம்..!!
- எழில்












Click it and Unblock the Notifications