என்னால் எனது தங்கையும் படிக்க முடியாமல் போனது! சுவாரஸ்யமான பிளாஷ்பேக் கூறிய ஸ்டாலின்!
சென்னை: சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் தன்னால் தனது தங்கை செல்வியும் படிக்க முடியாமல் போனதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தாம் படித்த கிறிஸ்துவக் கல்லூரி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்த சுவாரஸ்யமான பிளாஷ்பேக்கை பகிர்ந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு விவரம் வருமாறு;

சர்ச் பார்க் கான்வென்ட்
என்னை இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று எவ்வளவோ முயற்சி செய்தார். ஏற்கனவே நான் ஒன்றாவதிலிருந்து ஆறாவது வரை படிப்பதற்கு சர்ச் பார்க் கான்வென்டில் சேர்ப்பதற்கான முயற்சியில் என்னையும் என்னுடைய தங்கை செல்வியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்தார். அட்மிஷன் கிடைத்தது.

பெயரை மாற்றுங்கள்
அட்மிஷன் கிடைத்து ஸ்கூலில் கொண்டு போய் சேர்க்கின்ற நேரத்தில், என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று பள்ளியில் சொல்லிவிட்டார்கள். ஸ்டாலின் என்கிற பெயர் இருக்கக்கூடாது. ரஷ்யாவில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சிலையெல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த சூழ்நிலையில் இந்தப் பெயரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெயரை மாற்றுங்கள். மாறன் தான் எங்களை ஸ்கூலுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

கிடைப்பது கஷ்டம்
சர்ச் பார்க் கான்வென்டில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இப்போது சுலபமாக கிடைத்துவிடும் அது வேறு. அப்பொதெல்லாம் ஸ்கூலை பொறுத்தவரைக்கும் ஒன்றாவதிலிருந்து ஆறாவது வரை படிக்கிற பள்ளியைப் பொறுத்தவரைக்கும் சர்ச் பார்க்கில் இடம் கிடைப்பது என்பது அவ்வளவு அபூர்வம். அதுமாதிரி, ஆறாவதிலிருந்து 11-ஆவது வரை ஒரு பள்ளியில் சேரவேண்டுமென்றால், இந்த கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப்பள்ளியில் இடம் கிடைக்கிறது என்றால் மிகவும் அபூர்வம். கிடைப்பது கஷ்டம்.

தங்கைக்கு வாய்ப்பில்லை
அப்போது முரசொலி மாறன் அவர்கள் என்னுடைய தந்தையிடத்தில் சென்று பெயரை மாற்றச் சொல்கிறார்கள் அப்போது தான் அட்மிஷன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள் என்றார். பள்ளியை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.
அதற்குப்பிறகு பக்கத்தில் இருக்கின்ற மான்டேசெரி ஸ்கூலில் கொண்டு போய் சேர்த்தார்கள். என்னால் என்னுடைய தங்கையும் அங்கு படிக்க முடியாமல் போய்விட்டது. அதையெல்லாம் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன்.
-
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications