எப்படி போகுது... மக்கள் என்ன சொல்றாங்க... அப்பப்போ அப்டேட் செய்துகொள்ளும் ஸ்டாலின்
சென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது அந்த தொகுதி நிலவரங்களை பற்றி நேரடியாக அறிந்துகொள்கிறார் ஸ்டாலின்.
விக்ரவாண்டி தேர்தல் பொறுப்புக்குழு செயலாளர் பொன்முடியையும், நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனையும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஸ்டாலின் வாக்குப்பதிவு எப்படி போகிறது.. மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து கேட்டு தெரிந்துகொள்கிறாராம்.

வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டாலினிடம் இருந்து போன்கால்கள் பறந்துள்ளன. விக்ரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு சற்றும் குறையாமல் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளருக்கும் அவர் முக்கியத்துவம் தருவது காங்கிரஸ் கட்சியினருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சில இடங்களில் கோளாறு செய்ததையும், அதிகாரிகளின் அலட்சியத்தையும் பொன்முடி ஸ்டாலினுக்கு பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பாக சட்டத்துறை நிர்வாகிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கூறுங்கள் எனத் தெரிவித்தாராம். மேலும், அதிமுக தரப்பில் விதிமீறலில் ஈடுபட்டால் உடனடியாக தன்னை தொடர்புகொண்டு தகவல் சொல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications