தமிழிசைக்கு தாகம் வந்திருச்சு.. ஸ்டாலின் கிண்டல்!!
சென்னை: தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் உடனான சந்திப்பு தமிழிசைக்கு தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் நேற்று சந்தித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டு வரும் நிலையில் ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு தீவிரமாக உற்றுநோக்கப்பட்டது.
மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

மரியாதை நிமித்தம்
தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு செல்ல வந்தார். கோயிலுக்கு செல்லும் வழியில் என்னை சந்திக்க வந்தார். இது ஒரு மரியாதை நிமித்தமானது தான்.

எனக்கு தெரியவில்லை
மூன்றாவது அணி அமைப்பதற்காக சந்திர சேகர் ராவ் இங்கு வரவில்லை. மூன்றாவது அணி வருமா என்பது எனக்கு தெரியவில்லை.

தேர்தல் முடிவுக்கு பின்
தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணி முடிவு வந்த பிறகுதான் 3வது அணி அமைவது குறித்து தெரியும் என்றார்.தொடர்ந்து சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து பா.ஜ.க, தலைவர் தமிழிசை , இது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழிசைக்கு தாகம்
அதற்கு பதிலளித்த ஸ்டாலின் " இந்த சந்திப்பு தமிழிசைக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த சந்திப்பு தமிழிசைக்கு தாகத்தை ஏற்படுத்தியுள்ளது " என்று நக்கலாக பதில் அளித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications