புஸ்ஸி ஆனந்த்.. கோடி கோடியாக பணம் வரும்.. தவெக MLAகளுக்கு சொன்ன முக்கிய அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்புடன் உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இன்னும் உறுதியாகவில்லை.

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியல் இல்லாததால் உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான சூழலில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து கூட்டணி ஆதரவை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

stalin advice to vck cpi cpm stalin tells left parties take time pussy anand tvk mlas advice tvk coalition support today vijay tvk government formation stalin okay with left decision tamil nadu politics latest vck meeting today tvk cpi cpm meeting chennai stalin strategic move tvk tvk 108 seats support hunt tamil nadu hung assembly update pussy anand motivational speech stalin assures left parties tvk alliance breakthrough 108

இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க திமுக, அதிமுக கூட்டணி சேர்ந்தால், தவெக MLA-க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தவெக MLA-க்களுக்கு புஸ்ஸி ஆனந்த் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

புஸ்ஸி ஆனந்தின் அறிவுரை

இந்த முக்கிய கட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் எம்.எல்.ஏக்களுடன் பேசியுள்ளார். "எதிர்கட்சிகளை தவெக-வில் இருந்து வெளியேற கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் விஜய் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் இருங்கள். எதையும் நினைத்து குழம்ப வேண்டாம். நேர்மையான நடந்து கொள்ளுங்கள், நல்லதே நடக்கும்" என்று அவர் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

மேலும், "விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுடன் விரைவில் இணைவார்கள், உறுதியாக இருங்கள்" என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவுரை ராஜினாமா செய்ய தயாரான தவெக எம்.எல்.ஏக்களுக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளது.

விசிக, இடதுசாரி கட்சிகளின் முடிவு இன்று எதிர்பார்ப்பு

தவெக சார்பில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியுள்ளது.

மீதமுள்ள ஆதரவைப் பெற விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இந்த மூன்று கட்சிகளும் தலா 2 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளதால், அவர்களின் ஆதரவு கிடைத்தால் தவெக 119 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை எளிதில் எட்டும்.

இன்று முக்கிய கூட்டங்கள்

தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சென்னையில் இன்று கூட்டம் நடத்தி முடிவு எடுக்க உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கும், நிர்வாகக்குழு கூட்டம் மாலை 3 மணிக்கும் சென்னையில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் தவெகவின் ஆட்சியமைப்பு முயற்சிக்கு முக்கியமானதாக இருக்கும். இதுதான் தவெக-வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

ஸ்டாலின் சொன்ன முக்கிய அட்வைஸ்

தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் பரபரப்பான சூழலில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்.

"அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் திமுகவிற்கு 'ஓகே' தான்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுரை, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கும் நிலையில் உள்ள இந்த மூன்று கட்சிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இதேவேளையில் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் கொடுத்துள்ளது.

தமிழக அரசியல் தற்போது ஒரு முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், பெரும்பான்மையை எட்டுவதற்கான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெறும் கூட்டங்களின் முடிவுகள் அடுத்த சில மணி நேரங்களில் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் இந்த அரசியல் நகர்வுகளை உற்று நோக்கி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+