என்ன வேலையோ அதை மட்டும் பாருங்க; கூடா நட்புகள் வேண்டாம்; எம்.பி.க்களிடம் ஸ்டாலின் கறார்!
சென்னை: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் மீது ஒரு கண் வைப்பதற்காக தனி டீம் ஒன்று டெல்லியில் களமிறக்கப்பட்டுள்ளதாம்.
எம்.பி.க்களின் தேவையற்ற தொடர்புகள், அவர்களது நகர்வுகள் குறித்து நோட்டமிட்டு அது தொடர்பான தகவலை தலைமைக்கு அந்த டீம் பாஸ் செய்யும் எனக் கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை போல் மீண்டும் ஒரு நிகழ்வு நடந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறாராம்.

குளிர்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் அதில் பங்கேற்பதற்காக திமுக எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த சூழலில் அவர்களை ஏதேனும் சிக்கலில் சிக்க வைத்து அதன் மூலம் திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில அரசியல் லாபிஸ்ட்கள் காய் நகர்த்தி வருவதாக முன் கூட்டியே கிடைத்த தகவலை அடுத்து எம்.பி.க்களை உஷார்படுத்தியுள்ளது திமுக தலைமை.

கசப்பான சம்பவம்
நீரா ராடியா உரையாடல் உள்ளிட்ட கடந்த கால கசப்பான சில அனுபவங்களை போல் திமுகவுக்கு எள்ளளவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சென்ற வேலையை மட்டும் பார்க்குமாறு ஏற்கனவே திமுக தலைமை எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. சூழ்ச்சி வலை விரிப்பவர்களின் முதல் சாய்ஸ் புதிதாக எம்.பி. ஆனவர்களும், அரசியலை கடந்து கல்லூரிகள், குவாரிகள் என தொழில் செய்து வரும் எம்.பி.க்களும் தான்.

இலக்கை நோக்கி
எனக்கு அவரை தெரியும், இவரை தெரியும், ஃபைலை நான் மூவ் பண்ண வைக்கிறேன் எனக் கூறி அதற்கு பேரம் பேசுவதற்காகவே ஒரு பெரிய பட்டாளம் டெல்லியில் சுற்றிக்கொண்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்கிற இலக்கை நோக்கி பயணித்து வரும் ஸ்டாலின், அதற்கு இடையூறாக கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் எந்த ஒரு சச்சரவும் நடந்துவிடக் கூடாது என மிக கவனமாக இருக்கிறார்.

அண்ணாநகர் பிரமுகர்
அண்ணாநகர் பிரமுகர் ஒருவர் தான் டெல்லியில் திமுக அலுவலகத்தை கட்டி வருகிறார். இதனால் அவர் மூலமே டெல்லியில் திமுக எம்.பி.க்களின் மூவ்மெண்ட்களும் கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அவை நடவடிக்கைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என புதிய ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு டி.ஆர்.பாலு வகுப்பு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications