திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் நாளை வேட்பு மனுத்தாக்கல்! சென்னைக்கு படையெடுக்கும் கட்சியினர்!
சென்னை: திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ள நிலையில், அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகமெங்கும் இருந்து கட்சியினர் சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே இன்னும் 2 நாட்களில் சென்னையில் பொதுக்குழு வேறு நடைபெறவுள்ளதால் திமுக முகாம் களை கட்டியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் நாளைய தினம் வேட்புமனு கொடுக்கிறார்கள்.

திமுக தலைவர்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அடங்கிய பொதுக்குழுக் கூட்டம் 9.10.2022 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள "செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறுகிறது. அப்போது திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன.

வேட்புமனுத் தாக்கல்
இதனிடையே மேற்கண்ட பொறுப்புகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை 7-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக் கொள்ளப்படும். இப்பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் வேட்புமனுக் கட்டணமாக ரூ.50,000 செலுத்த வேண்டும். அந்த வகையில் திமுக தலைவர் பதவிக்கு நாளை காலை ஸ்டாலின் முறைப்படி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் நாளைய தினம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள்.

முன்மொழிய வேண்டும்
தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் நான்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் ஐவர் முன்மொழிய வேண்டும், ஐவர் வழி மொழிய வேண்டும் என்பது திமுக விதி. இந்நிலையில் ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அப்படியே அடுத்த 2 நாட்களில் நடைபெறும் பொதுக்குழுவில் கலந்துகொள்ளவும் வேண்டி தமிழகம் முழுவதும் இருந்தும் கட்சிக்காரர்கள் சென்னைக்கு இன்றே படையெடுத்துவிட்டனர்.

போட்டி இருக்காது
முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் திமுக தலைவர் பதவிக்கு எந்தப் போட்டியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல், பொதுக்குழு என அடுத்தடுத்து 2 முக்கிய நிகழ்வுகள் தொடர்ந்து இருப்பதால் திமுக தலைமைக் கழகம் பரபரப்பாக காணப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications