ஸ்டாலினை வில்லனாக்கி விஜய் பெரிய ஆளாக முடியாது.. 41 லட்சம் ஓட்டு என்னாச்சு? அய்யநாதன் பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது சத்தியபாமா மற்றும் மரகதம் குமாரவேல் போன்றோரை மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.. திமுக, அதிமுக . திட்டமிட்டு இதைச் செய்வதாக சிடி நிர்மல்குமார் கூறுகிறார்.. பொழுது விடிந்தால் பொய் பேசுபவர்கள், திமுக பற்றி குறை சொல்லலாமா? என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான அய்யநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள அய்யநாதன், "ஜெம் வீரமணி விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் லாபம் தேட பார்க்கிறார்கள்... போக்சோ நீதிமன்ற நீதிபதி பத்மா இந்த வழக்கை மீண்டும் விசாரணை செய்யுங்கள் என்று சொன்ன பிறகுதான் இந்த கேஸ் புத்துயிர் பெற்று புது ஆற்றலோடு வருகிறது.. நீதிபதி கடமையுணர்வுடன் செய்தார். ஆனால் இவர்கள் ஒரு மண்ணும் செய்யாமல், இதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

Stalin Vijay Ayyanathan

ஸ்டாலினை வில்லனாக காட்ட வேண்டும்

திமுக தலைவர் ஸ்டாலினை வில்லனாக காட்ட வேண்டும்.. அவரது பல ஆண்டு அரசியல் அனுபவத்தையும் அவரது சாதனைகளையும் யாராலும் எட்ட முடியாது... மேயர் இருந்தபோதும் சாதித்தவர், துணை முதல்வராகவும் சாதித்தவர்தான்.. உள்ளாட்சி துறையை வைத்தும் சாதித்தவர்தான்.. கட்சியிலும், ஆட்சியிலும் உழைத்து உழைத்து சாதித்தவர் ஸ்டாலின்.. அவரை வில்லனாக்கி விட்டு, இந்த டான்ஸ் பெரிய ஆளாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்.. அப்போதும் முடியல.. அதனால், குற்றச்சாட்டு அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

எதுவுமே தெரியாதவர்களால், எதுவுமே செய்துவிட முடியாது... ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் திறம்பட செயல்பட அனுபவம் வேண்டும், சினிமாவில் வெறும் மேக்கப் போட்டுவிட்டு, இங்கே டேபிளைத் தடவிக்கொண்டிருப்பது போன்ற ஏமாற்று வேலைகளை மட்டுமே சிலர் செய்து வருகிறார்கள்.

41 லட்சம் பேர் ஓட்டு

எஸ்ஐஆர் முறையை ரத்து செய்ய வேண்டும்.. ஸ்டாலின் ஐயா ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுத்து இந்த தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, பழைய வாக்காளர் பட்டியலை வைத்து மீண்டும் தேர்தல் நடத்தினால் இவர்களை எல்லாம் குப்பையில் தூக்கி எறியலாம்.

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்காகச் செயல்பட்டுள்ளதாகவும், எனவே 5 மாநில முக்கிய தேர்தல்களையும் ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்புகின்றன.. நீக்கப்பட்டவர்கள் 41 லட்சம் பேர் என்கிறார்கள்.. இந்த 41 லட்சம் பேர் ஓட்டு போட்டிருந்தால் தேர்தல் என்ன ஆயிருக்கும்? நீக்கப்பட்டர்கள் எல்லாம், ஸ்டாலின் ஆட்சியில் பலனடைந்தவர்கள்.. அப்படி லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளார்கள்.

படுத்துகிட்டே ஜெயிப்பார் எங்க அண்ணன்

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு வருகிறது.. வழக்கத்தை விட ஒரு உச்சகட்ட பதட்டம், வரப்போகும் இடைத்தேர்தலில் நிலவுகிறது.. "படுத்துகிட்டே ஜெயிப்பார் எங்க அண்ணன் விஜய், அவர் வரவே தேவையில்லை, அவர் முகமும் பெயரும் மட்டுமே போதும்" என்று சொன்னார்கள்.. குப்புற படுத்துட்டே ஜெயிப்பதற்கு, இந்த ஆட்சி என்ன இதுவரை என்ன செய்துள்ளது.

மின்தடை மற்றும் ஆற்றில் தண்ணீர் வராதது போன்ற பொதுமக்களின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல், மெட்ரோ ரயில் திட்டங்களைப் பார்வையிடுவது போன்ற ஏமாற்று வேலைகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுகிறார்கள்..

சத்தியபாமா மற்றும் மரகதம் குமாரவேல்

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் போது சத்தியபாமா மற்றும் மரகதம் குமாரவேல் போன்றோரை மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.. திமுக, அதிமுக . திட்டமிட்டு இதைச் செய்வதாக சிடி நிர்மல்குமார் கூறுகிறார்.. பொழுது விடிந்தால் பொய் பேசுபவர்கள், திமுக பற்றி குறை சொல்லலாமா? கூட்டங்களுக்கு வருபவர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டுப் பேசுவது ஏன்? பணத்தைத் தாண்டி ஜெயிப்போம் என்று சட்டமன்றத்தில் பேசிக்கொண்டு இப்போது பொதுமக்களுக்குப் பணம் கொடுப்பது ஏன்?

ஏதாவது விமர்சனம் செய்ய வேண்டுமே என்பதற்காக திமுக, அதிமுக இடையே கூட்டணி உள்ளதாகக் அவதூறுகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனவே திமுகவுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+