ஒருத்தர் ஸ்கூலுக்குப் போறார்.. இன்னொருத்தர் கிரிக்கெட் ஆடுறார்.. ஜாலியாதான் இருக்கு திமுக, அதிமுக!
Recommended Video
சென்னை: அரசியல் களம் உள்ளாட்சித் தேர்தலால் கதகதவென இருந்தாலும் கூட முக்கியத் தலைவர்கள் ரிலாக்ஸ் ஆக ஆரம்பித்து விட்டனர்.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை வென்று திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளும் தங்களது சத்துக்கு ஏற்ப ஜெயித்துள்ளன.
இந்த தேர்தலில் என்ன விசித்திரம் என்றால் யாருமே கவலையுடன் இல்லை. எல்லோருமே உற்சாகமாகவே இருக்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளனர். எங்களை வெற்றி பெற வைத்த என்றுதான் அத்தனை பேரும் ஒரே குரலில் வாக்காளர்களுக்கு நன்றி கூறிக் கொண்டுள்ளனர்.

நேற்று திமுக
இந்த நேரத்தில் இரண்டு சுவாரஸ்யமான நிகழ்வுகளை தமிழக மக்கள் நேற்றும் இன்றும் கண்டு ரசித்துள்ளனர். நேற்று நடந்தது திமுக முகாமில். இன்று நடந்தது அதிமுக தரப்பில். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தான் படித்த பள்ளிக் கூடத்திற்கு விசிட் அடித்தார்.. பள்ளித் தோழர்களுடன் கலந்துரையாடினார். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாத குறைதான்.

ஸ்கூலுக்குப் போன ஸ்டாலின்
ஸ்டாலினின் பள்ளிக் கூடம் சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. முன்னாள் தோழர்களுடன் ஸ்டாலின் நேற்று அங்கு விசிட் அடித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவரது பால்ய நண்பரான ஷியாம் சுந்தர் என்பவர் கூறுகையில், ஸ்டாலின் எங்களுடன் மிகவும் இயல்பாக பழகுவார். அப்போதே தெரியும் அவர் அரசியலுக்கு வருவார், சாதனை படைப்பார் என்று நெகிழ்ந்து கூறினார்.

அதிமுகவின் பதிலடி
இது திமுக தரப்பில் நேற்று நடந்த சுவாரஸ்யம். இன்று அதிமுக தரப்பு தன் பங்குக்கு ஒரு சுவாரஸ்ய நிகழ்வை நடத்தி அசரடித்தது. இதில் ஹீரோக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர் ஜெயக்குமாரும்தான். ஆம் முதல்வர் பேட்டைப் பிடிக்க.. ஜெயக்குமார் பந்து வீச.. ஆமாங்க இருவரும் கிரிக்கெட் ஆடி கலக்கினர்.

கிரிக்கெட் விளையாடிய முதல்வர்
சென்னையில் ஐஏஎம் - ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போதுதான் கிரிக்கெட் போட்டியை ஆடி தொடங்கி வைத்தார் முதல்வர். பக்கா யூனிபார்மில் முதல்வரும், ஜெயக்குமாரும் கலக்கினர்.

முதல்வர் பேட் பிடிக்க
ஜெயக்குமார் பவுலிங் போட்டபோது அதை லாவகமாக பேட்டில் வாங்கி ஷாட் அடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பந்தை அடித்து விட்டு நிமிர்ந்தபோது அடடா அத்தனை பெருமிதம் முதல்வரின் முகத்தில். அதேபோல டிஜிபி ஜே.கே. திரிபாதியும் பவுலிங் போட அதையும் முதல்வர் விடாமல் வாங்கி அடித்து கலக்கினார். இப்படியாக அந்த இடத்தில் கலகலப்பு கூடியது.

மக்களையும் பாத்துக்கங்க
மொத்தத்தில் நேற்று திமுகவும், இன்று அதிமுகவும் கலகலப்பை ஏற்படுத்தி விட்டன.. அதேபோல தாங்கள் சந்தோஷமாக இருப்பது போல தங்களை நம்பியுள்ள மக்களையும் இந்த இரு கட்சிகளும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டால், ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிதான்!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி











Click it and Unblock the Notifications