விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் திருச்சி சென்றுள்ள நிலையில் இன்று முதல் வேலையாக திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்தார். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தமிழக அரசியல் களம் இப்போது திருச்சியைச் சுற்றிச் சுழலத் தொடங்கியிருக்கிறது. தவெக தலைவர் விஜய் நேரடியாகக் களமிறங்குவதால் 'ஸ்டார் அந்தஸ்து' பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில், இன்று காலை விடியும் முன்பே பரபரப்பு பற்றிக்கொண்டது.

tamil nadu assembly elections 2026 TVK Vijay

வழக்கமான காலை நடைப்பயிற்சிதானே என்று நினைத்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

காந்தி மார்க்கெட்டில் வாக்கு வேட்டை

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி விடியற்காலையிலேயே சுறுசுறுப்பாக இருக்கும் இடம். அங்கு வியர்வையும் காய்கறி வாசனையும் கலந்திருக்க, திடீரென முதல்வர் என்ட்ரி கொடுத்ததும் வியாபாரிகளும் பொதுமக்களும் திகைத்துப் போயினர். திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை அருகில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கடைக்கும் சென்று "உதயசூரியனுக்கு மறக்காம ஓட்டு போடுங்க" என அவர் கேட்ட விதம், இது வெறும் நடைப்பயிற்சி அல்ல, விஜய்க்கு எதிரான பிரம்மாஸ்திரம்' என்பதைக் கோடிட்டுக் காட்டியது.

பாலக்கரை டீயும்... பீம நகர் பிளானும்...

மார்க்கெட் விசிட்டை முடித்துவிட்டு பாலக்கரை பகுதிக்கு வந்த முதல்வர், அங்குள்ள ஒரு டீக்கடையில் சட்டென்று அமர்ந்தார். தொண்டர்களுடன் இயல்பாகப் பேசிக்கொண்டே டீ குடித்த முதல்வர், அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த விதம் 'லோக்கல் கனெக்ட்' பாணியில் அமைந்திருந்தது. திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார் திமுகவின் இனிகோ இருதயராஜ். இந்த முறை இவருக்கு டார்கெட் வெறும் வெற்றி மட்டுமல்ல, 'பவர்ஃபுல்' விஜய்யின் தவெக-வை வீழ்த்துவதுதான்.

அரசியல் வட்டாரத்தில் அடிபடும் பலமான பேச்சு இதுதான்: "ஒருவேளை திருச்சி கிழக்கில் விஜயை வீழ்த்தி இனிகோ வெற்றி பெற்றால், அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி." திமுக அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் தலைமைக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில், விஜயை வீழ்த்தும் 'ஜெய்ன்ட் கில்லர்' பட்டத்தோடு வரும் இனிகோவுக்கு சிவப்பு விளக்கு கார் உறுதி என்கிறார்கள் அறிவாலய உடன்பிறப்புகள்.

மூன்றாவது அமைச்சரா? 'திருச்சி' லாஜிக் இடிக்குதே!

ஆனாலும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே திருச்சி மாவட்டத்திலிருந்து கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் என இரண்டு சீனியர் அமைச்சர்கள் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்கள். "ஒரே மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்களா?" என்பதுதான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.

வரலாறு என்ன?

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் (தொகுதி எண்: 141) கடந்த காலத் தேர்தல் முடிவுகள் குறித்த முக்கிய விவரங்கள்,

2021 சட்டமன்றத் தேர்தல்:

வெற்றி: இனிகோ இருதயராஜ் (திமுக) - 94,302 வாக்குகள்.

இரண்டாமிடம்: வெல்லமண்டி நடராஜன் (அதிமுக) - 40,505 வாக்குகள்.

வெற்றி வித்தியாசம்: 53,797 வாக்குகள். (திமுக இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து கைப்பற்றியது).

2016 சட்டமன்றத் தேர்தல்:

வெற்றி: வெல்லமண்டி நடராஜன் (அதிமுக) - 79,938 வாக்குகள்.

இரண்டாமிடம்: ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்கிரஸ்) - 58,044 வாக்குகள்.

வெற்றி வித்தியாசம்: 21,894 வாக்குகள்.

2011 சட்டமன்றத் தேர்தல்:

வெற்றி: ஆர். மனோகரன் (அதிமுக) - 83,046 வாக்குகள்.

இரண்டாமிடம்: அன்பில் பெரியசாமி (திமுக) - 62,420 வாக்குகள்.

வெற்றி வித்தியாசம்: 20,626 வாக்குகள். (2008 தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் நடந்த முதல் தேர்தல் இது)

மண்டல வாரியாகப் பார்த்தால், திருச்சிக்கு ஏற்கனவே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது அமைச்சருக்கான வாய்ப்பு என்பது தர்க்கரீதியாகச் சவாலானதுதான். இருப்பினும், 'சிறுபான்மை முகம்' என்கிற கார்டு.. விஜயை வீழ்த்தியவர் என்ற கார்டை வைத்தால் இந்த லாஜிக் உடையவும் வாய்ப்புண்டு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+