முதலமைச்சர் ஸ்டாலினை காக்க வைத்த கே.எஸ்.அழகிரி! பதற்றமான காமராஜர் அரங்கம்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கால் மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது.
காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த கக்கன் குறித்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முன்னோட்டத்தையும், பாடல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதற்கான விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக குறித்த நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக அங்கு ஆஜராகிவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் விழா மேடையில் கே.எஸ்.அழகிரி இல்லை. இதனால் காமராஜர் அரங்கமே பதற்றமானது. முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்வாரோ எனத் தெரியாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் பரிதவித்தனர். ஒரு வேளை முதல்வர் புறப்பட்டுச் சென்றுவிடுவாரோ என அஞ்சினர்.
இதனிடையே காமராஜர் அரங்கத்தில் உள்ள அறையில் முதல்வரை வரவேற்று அமர வைத்து கே.எஸ்.அழகிரி வந்துகொண்டிருக்கும் தகவலை மெதுவாக எடுத்துச் சொன்னார் காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா. ஒரு வழியாக கே.எஸ்.அழகிரி லேட் என்ட்ரி கொடுத்து விழா மேடைக்கு வந்ததும் அவரை முதல்வர் அமர்ந்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார் கோபண்ணா.
கே.எஸ்.அழகிரியிடத்தில் சிறிதும் முகம் சுளிக்காமல் மிஸ்டர் கூலாக சிரித்த முகத்துடன் உடனடியாக விழா மேடைக்கு வந்து அமர்ந்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
மற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால் கக்கன் வரலாற்று திரைப்படத்தின் முன்னோட்ட குறுந்தகடை வெளியிட்டவுடன் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில்












Click it and Unblock the Notifications