அதே மாதிரி இருக்கே? ஒன்னும் புரியலையே.. கமல் ஸ்டைலில் களமிறங்கிய ஸ்டாலின்.. குலுங்கும் கோவை தெற்கு!
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மேற்கொண்ட பிரச்சாரம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் வித விதமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். போகிற இடங்களுக்கு எல்லாம் செங்கல்லை தூக்கி சென்று உதயநிதி ஸ்டாலின் கிளாப்ஸ் அள்ளிகொண்டு இருக்கிறார்.
முதல்வர் பழனிசாமியோ தினமும் பல தொகுதிகளை தனியாளாக மொத்தமாக "கவர்" செய்து கொண்டு இருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலினும் தினமும் அதிக அளவு தொகுதிகளுக்கு சென்று, திமுகவிற்காக தீவிரமாக மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்.

எப்படி
இதில் பிரச்சாரத்தின் தொடக்கத்தில் அதிகம் கவர்ந்தது என்னவோ மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் மேற்கொண்ட தீவிர பிரச்சாரம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் பாணியில் சாலையில் வாக்கிங் சென்று இவர் கவனம் ஈர்த்தார்.

ஆட்டோ
ஆட்டோவில் சென்று வாக்கு கேட்டது, மக்களோடு எளிமையாக பேசி பழகி வாக்கு கேட்டது என்று கோவை தெற்கில் கமல்ஹாசன் மிக சிறப்பாக ஸ்கோர் செய்தார். கோவை தெற்கில் மட்டுமின்றி தமிழகம் முழுக்கவே கமல்ஹாசனின் இந்த ஸ்டைல் பிரச்சாரம் ஹிட் அடித்தது. தற்போது இதே ஸ்டைலை திமுக தலைவர் ஸ்டாலினும் கையில் எடுத்துள்ளார்.

அதே ஸ்டைல்
அதிலும் கோவை தெற்கு தொகுதியிலேயே கமல்ஹாசன் ஸ்டைலில் இன்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இங்கு காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதிகாலையே பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்டாலின் மஞ்சள் டீ ஷர்ட் அணிந்து கோவை தெற்கில் வாக்கிங் சென்றார்.

வாக்கிங்
கமல் பாணியில், வாக்கிங் சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்தார். அதே ஸ்டைலில் நடந்தபடி ஸ்டாலின் வாக்கு கேட்டார். கிட்டத்தட்ட இரண்டு பேரின் பிரச்சாரமும் ஒரே மாதிரிதான் இருந்தது. ஆனால் ஸ்டாலின் கமலை பார்த்து இப்படி செய்யவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சைக்கிள்
இதற்கு முன்பே ஸ்டாலின் சென்னையில் சைக்கிள் ஓட்டி கவனம் ஈர்த்து இருக்கிறார். அதன் ஒரு நீட்சிதான் இந்த வாக்கிங்.. இவர் கமலை பார்த்து வாக்கிங் செல்லவில்லை என்று கோவை தெற்கில் உள்ள திமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

ஏன்
மக்கள் மத்தியில் தங்களை பிட்டாக காட்டிக்கொள்வதில் அரசியல் தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் . மோடியின் யோகாவும் சரி, ஸ்டாலினின் சைக்கிளிங்கும் சரி , கமலின் வாக்கிங்கும் சரி .. உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியே அமைந்துள்ளது. ஆரோக்கியமான தலைவர்களை மக்கள் விரும்புவார்கள் என்பதை மனதில் வைத்து இந்த பிரச்சார யுக்தியை பின்பற்றி வருகிறார்கள்.

அரசியல்
ஸ்டாலின் இன்று கோவை தெற்கில் மேற்கொண்ட பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தடுத்து இப்படி முக்கிய தலைவர்கள் சாலையில் இறங்கி, மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்வதால் கோவை தெற்கு ஆட்டம் கண்டுள்ளது . நேற்று அமித் ஷா வருகை, இடையில் கமல் , இன்று ஸ்டாலின் என்று கோவை தெற்கு தொகுதி மீது எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications