டெல்லி கிளம்பும் முன் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு போன முதல்வர் ஸ்டாலின்.. பிறந்தநாளையொட்டி வாழ்த்து!
சென்னை: மூத்த அரசியல்வாதி ஆர்.எம்.வீரப்பனின் 98ஆவது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லிக்கு கிளம்புவதற்கு முன்பாக ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஆர்.எம்.வீ பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் (X) பக்கத்தில், "எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற மதிப்பும், அன்பும் கொண்டவருமான அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்! நம் பாசத்திற்குரிய ஆர்.எம்.வீ. அவர்கள் நூறு ஆண்டுகள் கடந்தும் முழு நலத்துடன் வாழ நெஞ்சார வாழ்த்துகிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சார்பில் இன்று இரவு வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். டெல்லி கிளம்புவதற்கு முன்பாக தி.நகர் சென்று ஆர்.எம்.வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications