"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்!
சென்னை: டெல்லி என்ன, அமெரிக்காவே மிரட்டினாலும் முதல்வர் ஸ்டாலின் எந்த காலத்திலும் பணிய மாட்டார் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அண்மையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், ஸ்டாலினை பற்றிய டிடிவி தினகரனின் விமர்சனத்துக்கு பதில் கொடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், சிவகங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு அரசியல் விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியது குறித்து திமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் , "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும் அவர் பணிய மாட்டார். ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் வரை தமிழ்நாடு என்றென்றும் தலைகுனியாது." எனத் தெரிவித்தார்.
தமிழக அரசு அதிகாரிகள்தான் திமுக ஆட்சியை நடத்துகிறார்கள் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "தமிழக அரசு ஒரு சிறப்பான அரசாக செயல்பட்டு வருகிறது. முதல்வர் மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருவதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்" என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும், தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "திமுகவில் பண்ணையார் ஆட்சி நடக்கிறது" என்று விமர்சித்தது குறித்த கேள்விக்கு, "ஆதவ் அர்ஜுனா என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறார். இதில் யார் பண்ணையார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்" என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத்












Click it and Unblock the Notifications