அன்புத் தம்பி அன்புமணி ராமதாஸ்! பாசம் மாறாத ஸ்டாலின்! திமுக பொதுக்குழு பிஸியிலும் பறந்த மெசேஜ்!
சென்னை: பாட்டளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
அதுவும் அன்புமணியை 'அன்பு இளவல்' என்று பாசமுடன் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாட்டாளி மக்களின் நலனுக்காக சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்திட வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு பரபரப்புக்கு மத்தியிலும் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை நினைவில் கொண்டு அவர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பதே இங்கு கவனிக்கத்தக்கது.

பாமக தலைவர்
பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் 55வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், அன்புமணியை அவர் 'அன்பு இளவல்' என்று பாசத்துடன் குறிப்பிட்டிருப்பது தான் ஹைலைட். வெறுமனே அன்புச் சகோதரர் என்று கூட ஸ்டாலின் நினைத்திருந்தால் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் அன்புமணியை தனது அன்புத் தம்பி என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக்குழு பரபரப்பு
திமுக தலைவராக 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், பொதுக்குழுவுக்கு பிறகு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதற்காக காரில் சென்ற போது அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் குறித்து நினைவூட்டப்பட்டுள்ளது. உடனடியாக அன்புமணிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின். திமுக பொதுக்குழு பரபரப்புக்கு மத்தியிலும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக் கூறியிருப்பது அன்புமணியை நெகிழ வைத்துள்ளது.

எதுவும் நடக்கலாம்
இதனிடையே வானிலையை போல் அரசியலிலும் எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக கூட்டணியில் பாமக என ஏற்கனவே ஆருடங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் அது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் தமிழகம், புதுச்சேரியில் வெற்றிபெற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக இருக்கிறார்.

அன்புமணி வாழ்த்து
திமுக தலைவராக 2வது முறை பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications