Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டார்லிங்க் இந்தியாவின் விலை விவரம்.. மாதம் ரூ. 8,600 கட்டணம், ஹார்டுவேர் ரூ. 34,000

Subscribe to Oneindia Tamil

சென்னை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் நீண்டகாலமாக செயற்கைகோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்க திட்டமிட்டிருந்தது. அதனை இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் தற்போது குடியிருப்புப் பகுதிகளுக்கான முழுமையான விலை விவரங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைக்கு மாதக் கட்டணமாக ரூ. 8,600 நிர்ணயம் செய்துள்ளது. இந்த சேவையை பெற புதிய சந்தாதாரர்கள் ரூ. 34,000 கொடுத்து ஹார்ட்வேர் கிட்டை வாங்க வேண்டியிருக்கும்.

எக்ஸ் தள நிறுவனத்தின் நிறுவனரும், டெஸ்லா கார் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது ஸ்டார்லிங்க் நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் இணைய சேவை வழங்குவதற்கான விலையை இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் இணைய இணைப்பை வழங்குகிறது. ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களால் சேவை வழங்க முடியாத மலைப்பிரதேசம், தொலைதூர கிராமங்கள், இணையசேவை சுத்தமாக இல்லாத இடங்களுக்கு ஸ்டார்லிங்கின் இணைய சேவை மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். அதேபோல் இந்தியாவின் எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்க இயலாத வேகத்தில் இணையசேவையை ஸ்டார்லிங் வழங்க போகும்.

Starlink India price details Monthly fee Rs 8 600 hardware Rs 34 000

தெளிவாக புரியும் படி சொல்வது என்றால், ஆப்பிள் போன் எப்படி பிராண்டாக இருக்கிறதோ, அதுபோல் ஸ்டார்லிங்க் இணையசேவையும் மிகப்பெரிய பணக்கார்களின் பிராண்டாக இருக்க போகிறது. சாமானியர்கள் யாருமே நினைத்து பார்க்க முடியாத மாத விலை கட்டணம் ஆகும். அதேநேரம் எப்போதுமே, எந்த இடத்திலும், இந்தியாவின் எந்த குக்கிராமத்தில் இருந்தும், இந்தியாவின் எந்த மலைப்பகுதிக்குள் இருந்தாலும் மிக அதிகவேக இணைய சேவையை பெற முடியும். நகரங்களில் உள்ளதைவிடவும் மிகத்தரமான இணையசேவை அதுவும் எந்த இடையூறும் இல்லாமல், நம்பகமாக பெற முடியும். ஆனால் விலை மிகப்பெரிய அளவில் அதிகம் ஆகும்.

ஸ்டார்லிங்கின் விலை விவரங்கள்

மாதாந்திரக் கட்டணம் எப்படி.. வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 8,600 கட்டணமாகச் செலுத்த வேண்டும். சாதனத்தின் விலை: புதிதாக இந்தச் சேவையைப் பயன்படுத்துபவர்கள், இணையத்தை இணைக்கத் தேவையான வன்பொருள் கிட்டை (Hardware Kit) ரூ.34,000 கொடுத்து வாங்க வேண்டும்.

குடியிருப்புத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்தத் திட்டம் வீடுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டேட்டா வரம்பு இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சேவையின் தரத்தை அறிந்து கொள்ள, முதல் 30 நாட்களுக்கு இதைச் சோதித்துப் பார்க்கலாம். 99.9% நேரம் இணையம் துண்டிக்கப்படாமல் கிடைக்கும் என்று ஸ்டார்லிங்க் உறுதியளித்துள்ளது. 34000 கொடுத்து ஹார்டுவேர் அதாவது மோடத்தை வாங்கிக்கொண்டால், இதை நாமே எளிதாகப் பொருத்திப் பயன்படுத்தலாம் ('பிளக் அண்ட் ப்ளே').

யாருக்கு நன்மை

முன்பே சொன்னது போல், கேபிள் இணைப்புகள் சரியாகக் கிடைக்காத பகுதிகள், தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்கள், அடர்ந்த மலைப்பகுதிகளில் உள்ளவர்கள், கடல்களில் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தற்போதைய நிலையில் வீடுகளுக்கான விலை விவரங்கள் வெளியிடப்பட்டாலும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான திட்டங்கள் மற்றும் அவற்றின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஸ்டார்லிங் வெற்றி பெறும் இடங்கள்

ஃபைபர் அல்லது மொபைல் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்காத அல்லது நம்பகத்தன்மையற்ற மிகத் தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் இந்த ஸ்டார்லிங் சேவை நிச்சயம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் கப்பல்கள், விமானங்கள், ரயில்கள், எண்ணெய் வயல்கள், சுரங்கங்கள் மற்றும் தொலைதூர அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நம்பகமான, அதிவேக இணைப்பு தேவை. இவற்றிற்கு ஸ்டார்லிங் சேவை பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் இயற்கைப் பேரிடர்களின் போது நில அடிப்படையிலான நெட்வொர்க் சேதமடைந்தால், ஸ்டார்லிங்க் உடனடியாக இணைப்பை வழங்க முடியும்.

மகாராஷ்டிரா கையெழுத்து

ஸ்டார்லிங்க் நிறுவனம் நாட்டின் முதல் முறையாக மகாராஷ்டிரா அரசுடன் ஒப்பந்தத் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், மகாராஷ்டிராவின் மிகவும் பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மற்றும் கிராமப்புற சமூகங்களுக்குச் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்க உள்ளது. இந்தியாவிலேயே ஸ்டார்லிங்குடன் முறையாகச் சேரும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா தான்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நிறுவனமான ஸ்டார்லிங்க் இந்தியாவுக்கு வருவதை மகாராஷ்டிராவிற்கு கிடைத்த மரியாதை என்று குறிப்பிட்டிருந்தார்.

முதல்வர் பட்னாவிஸ் கருத்து

இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "ஸ்டார்லிங்கின் துணைத் தலைவர் லாரன் ட்ரேயரை மும்பையில் வரவேற்பதில் மகிழ்ச்சி. மகாராஷ்டிரா அரசு ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், ஸ்டார்லிங்குடன் முறைப்படி ஒத்துழைக்கும் முதல் இந்திய மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் ICT துறையில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், மேலும் உலகின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை இது கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வந்து மகாராஷ்டிராவுடன் கூட்டு சேருவது எங்களுக்குக் கிடைத்த மரியாதை," இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+