ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை பெற ரெடியா? இந்தியாவில் நடக்கும் மாற்றம்! அதிரடியில் எலான் மஸ்க்
சென்னை: இந்தியாவில், ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை கொண்டு வர எலான் மஸ்க் தீவிரமாக முயன்று வருகிறார். இந்நிலையில் இதை சாத்தியப்படுத்த முதற்கட்டமாக 9 கேட்வே நிலையங்களை நிறுவன மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.
மும்பை, நொய்டா, சண்டிகர், கொல்கத்தா, லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் இந்த நிலையங்கள் அமைய உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் இன்டர்நெட் சேவையை வழங்கும் பணியை ஸ்டார்லிங்க் தொடங்க இருக்கிறது.

கேட்வே நிலையங்கள் ஸ்டார்லிங்க் இணையச் சேவைக்கு மிக முக்கியமாகும். இவை பூமியில் அமைக்கப்படும் பெரிய ஆன்டெனா நிலையங்கள் ஆகும். விண்வெளியில் உள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் இருந்து வரும் இணைய சிக்னல்களைப் பெற்று, அதைத் தரைக் கட்டுப்பாட்டு மையங்கள் வழியாகப் பிராட்பேண்ட் நெட்வொர்க்குடன் இணைக்கும் பணியை இவை செய்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இந்த நிலையங்கள்தான் விண்வெளிக்கும் பூமிக்கும் இடையேயான இணைய இணைப்பை ஏற்படுத்தும் மையங்களாக செயல்படுகின்றன.
ஒரு கேட்வே நிலையத்தால் சுமார் 200,000 சதுர கி.மீ பரப்பளவுக்கு இணைய சேவையை கொடுக்க முடியும். அமெரிக்காவில் மட்டும் சுமார் 100 கேட்வே நிலையங்களை மஸ்க் நிறுவி இருக்கிறார். அப்படியெனில் இந்தியாவில் குறைந்தது 80 நிலையங்களாவது தேவைப்படும்.
தற்போது மத்திய அரசு, ஸ்டார்லிங்கிற்கு முழுமையான வணிகச் சேவைக்கான அலைக்கற்றையை உடனடியாக வழங்காமல், முதலில் அதன் சேவையின் பாதுகாப்பு அம்சங்களையும், தொழில்நுட்ப சமாச்சாரங்களையும் சரிபார்ப்பதற்காக தற்காலிகமாக மட்டுமே அலைக்கற்றையை ஒதுக்கியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அதன் அனைத்துப் பயனர்களுக்கும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 600 ஜிகாபிட்ஸ்/வினாடி இணையத் தரவுத் திறனை வழங்க ஸ்டார்லிங் திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிக அதிக திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது. இவ்வளவு பெரிய திறனைக் கையாளுவதற்கு, இந்தியாவில் பல கேட்வே நிலையங்கள் தேவைப்படும்.
ஸ்டார்லிங்க் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் நெட்வொர்க் வழியாக இந்தியத் தரவுகள் கடத்தப்படுவது, தவறாகப் பயன்படுத்தப்படுவது, அல்லது தரவுகளை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற செயல்களைத் தடுக்க, இந்திய அரசின் அனைத்துப் பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இணங்குகிறதா என்பதை நிரூபிக்க வேண்டும். இந்தத் தற்காலிக ஒதுக்கீடு என்பது சோதனை காலத்திற்கு மட்டுமே. சோதனை வெற்றிகரமாக முடிந்து, பாதுகாப்பு அமைப்புகள் இறுதி ஒப்புதல் அளித்த பின்னரே ஸ்டார்லிங்கிற்கு வணிக ரீதியாகச் செயல்படவும், நிரந்தர அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications