சூரியன் சுட..அக்னி நட்சத்திர காலத்தில் தார் ரோடு எல்லாம் உருகுதே..வெதர்மேன் வார்னிங்
சென்னை: கோடை மழை கொட்டித்தீர்த்துள்ளதால் தென் மாவட்டங்களில் அக்னி நட்சத்திர காலத்தை குளுமையாக கடந்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவாகும் புயலின் திசை மாற்றத்தினால் அடுத்த வாரங்களில் தார்ரோடு உருகும் அளவிற்கு சூரியன் சுட்டெரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்னி நட்சத்திர காலத்தில் அடைமழை காலம் போல கோடை மழை கொட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் வானிலை ஆய்வு மையம் மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டது. அதில் திங்கட்கிழமை 8ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை 10ஆம் தேதியன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும். இது 11.05.2023 வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் திசை மாறியதால் மழையானது படிப்படியாக குறையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் திசைமாறியுள்ளதால் இனிதான் உண்மையான அக்னி நட்சத்திரத்தை மக்கள் அனுபவிக்கப்போகிறார்கள் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் வானிலை பற்றி கேள்வி கேட்டு புதிர் விளையாட்டு விளையாடியுள்ளார். வரப்போகும் 11 மற்றும் 12ஆம் தேதி தமிழக வானிலையானது ரசிக்கும் படியாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்தவாரம் சூரியனுக்கான நேரம் என்று பதிவிட்டுள்ளார்.
மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பமானது. அந்த புதிருக்கான க்ளூவாக அக்னி நட்சத்திரம் படத்தில் லட்சுமிபதி, செட்டியார் ஆக நடித்த ஜனகராஜ், வி.கே. ராமசாமி ஆகியோரின் காமெடி காட்சியை பதிவிட்டுள்ளார்.
மூன்றாவதாக தனது க்விஸ் கேள்வியில் அடுத்தவாரம் தார் ரோடு எல்லாம் உருகுதே...அதற்குக் காரணம் சுளீர் வெயில் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கேள்வி பதிலை நீங்கள் என்ஜாய் செய்திருப்பீர்கள். ஆனால் அடுத்த வாரம் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றத்தை உங்களால் அனுபவிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications