மத்திய அரசிடம் மாநில அரசு சரண்டர்.. இந்த தேர்தலில் புரட்சி வெடிக்கணும்..மன்சூர் அலிகான் பரபர பேச்சு
சென்னை: ‛‛மத்திய அரசிடம் மாநில அரசு சரண்டர். வரி வரி என்று என்னென்னமோ கண்டுபிடித்து வரி போடுகிறார்கள். நிர்மலா சீதாராமன் மேடம் எங்கத்தான் கற்றுகொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. இந்த தேர்தலில் மாற்றமும் புரட்சியும் வெடிக்க வேண்டும்'' என்று பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து புகழ்பெற்றவர் மன்சூர் அலிகான். 90ஸ் காலத்தில் தனது மிரட்டலான நடிப்பால் வில்லன் கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பினார். அதன்பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சமீபத்தில் அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் - திரிஷா நடிப்பில் வெளியோன லியோ திரைப்படத்தில் நடித்து மீண்டும் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் நடிகர் திரிஷா குறித்து அவர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவர் வருத்தம் தெரிவித்தார். திரிஷாவும் மன்னித்து விட்டதால் மன்சூர் அலிகான் தப்பினார்.
இந்நிலையில தான் தற்போது அவர் ‛சரண்டர்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் நடிகர் தர்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தவிர நடிகர்கள் லால், ராம்தாஸ், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை கவுதம் கணபதி இயக்கி உள்ளார். ஆகஸ்ட் 1ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படக்குழு சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மன்சூர் அலிகான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த படத்துக்கு ‛சரண்டர்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்குள்ளே ‛அறம் கூற்றாகும்' என்ற அற்புதமான அறத்தை தொகுப்பாளினி, இளங்கோவடிகள் கூற்றில் இருந்து எடுத்து பேசினார்கள். அவரை பாராட்ட வேண்டும். சரண்டர் திரைப்படம் சரியான நேரத்தில் வருகிறது. பத்தோடு,பதினொன்றாக இருக்கப்போவது இல்லை. நிச்சயமாக நல்லா இருக்கும்.
மத்திய அரசக்கு மாநில அரசு சரண்டர். டிரம்புவிடம் மோடி சரண்டர். மனைவியிடம், கணவர் சரண்டர். எல்லாம் வரி வரி என்று என்னென்னமோ கண்டுபிடித்து வரி போடுகிறார்கள். நிர்மலா சீதாராமன் மேடம் எங்கதான் கற்று கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. அந்த வரி, இந்த வரி, வணிக வரி, ஜிஎஸ்டி, மாநில வரி, மத்திய வரி என்று ஒன்றுக்கு 4 முறை வசூல் செய்து மக்களிடம் எல்லாவற்றையும் அவிழ்த்து கொண்டு விட்டு விடுகிறார்கள். இதனால் மக்கள் சரண்டராகி உள்ளனர். அதனால் இந்த தேர்தலில் மாற்றமும், புரட்சியும் வெடிக்கணும். அதற்கு இந்த படம் முத்தாய்ப்பாக அமையும் என்று நினைக்கிறேன்'' என்றார்.
முன்னதாக நடிகர் மன்சூர் அலிகான் சீமானின் நாம் தமிழர் கட்சியில் அவர் சேர்ந்து செயல்பட்டார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறி தனியாக கட்சி தொடங்கினார். கடந்த 2024 பிப்ரவரியில் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications